Followers

Thursday, 6 September 2012

ஆசைதான் எனக்கு

ஆசைதான் எனக்கு













 மார்கழி குளிர் இதமாய்உன் நெஞ்சத்தில்,
மஞ்சமிட ஆசைதான் எனக்கு.
உன் முரட்டுகரங்களுக்குள்,  
இடைவெளியே இல்லாமல்,

இணைந்து கிடக்கஆசை தான்எனக்கு.
நீ உறங்குகிறாய்என்று எண்ணி 
முகமெங்கும் முத்தமிட்டு,
உன் விழிப்பில்வெட்கப்பட 
 ஆசைதான் எனக்கு.
நீள்கிற ஆசைகளை 
 பட்டியலிட தோன்றினாலும்,
உன் வார்த்தைஅம்புகளுக்கு 
பயந்து  எனக்குள் மருகி போகிறேன்.
காதலோடு நேசிக்கும் பெண்மையை
சம்பிரதாயகூட்டிற்குள் முடக்கிவிடுவாதால்
வாழ்வும் கசந்து தான் போகிறது.