Followers

Friday 18 November 2011

இலவச கட்டண உயர்வு

 





தமிழக அரசு ஷெல்லுக்குள் போகுதோ?

பஸ் கட்டண உயர்வை திசை திருப்ப ஜெயலலிதா திட்டம்

 
 
 
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசினார்.
 
அதில், போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்றும், இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திடீர் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. பொதுமக்கள் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
 
வெள்ளிக்கிழமை காலை, பத்திரிகைகளில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு பற்றிய செய்தி மக்கள் மனதில் பதியும்படி வெளிவரும் என்பதால், தமிழக அரசு இந்த விஷயத்தை திசை திருப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 
வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே போக்குவரத்துத்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை அவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
இந்த செய்திகள் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள், ரேடியோக்களில் வெளியானால், பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு போன்றவை பெரிய விஷயமாக எடுபடாது என்ற நம்பிக்கையில் உள்ளது ஆளும் அதிமுக தரப்பு.



Thursday 17 November 2011

சோனியாவுடன் சந்திப்பு:நடிகர் சிரஞ்சீவி மத்திய மந்திரி ஆகிறார்

 
 
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.ஆந்திர சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் கட்சியை நடத்தவும் சிரமப்பட்டார்.
 
ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள போதிலும் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்களால் கடும் சவாலை சந்தித்து வருகிறது. எனவே சிரஞ்சீவியை காங்கிரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.அதை ஏற்று கடந்த ஆகஸ்டு மாதம் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரசுடன் சிரஞ்சீவி இணைத்தார்.
 
காங்கிரசில் சிரசீவிக்கும், அவரது எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் உரிய பதவிகள் கொடுத்து முக்கியத்துவம் தரப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரோசய்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, தெலுங்கானா, பிரச்சினை மற்றும் சோனியா உடல் நலக்குறைவு காரணமாக சிரஞ்சீவிக்கு காங்கிரசில் எந்த பதவியும் கொடுக்கப்படாமல் இருந்தது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நடிகர் சிரஞ்சீவி கட்சி இணைப்புக்குப் பிறகு நேற்று முதன் முதலாக டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரஜாராஜ்ஜியம் கட்சியை காங்கிரசுடன் இணைத்ததற்காக சிரஞ்சீவிக்கு சோனியா நன்றி தெரிவித்தார்.
 
மேலும் மத்திய மந்திரி சபையிலும், காங்கிரஸ் கட்சியிலும் உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப முக்கியமான பதவிகள் தரப்படும் என்று சிரஞ்சீவியிடம் சோனியா உறுதியளித்தார். இதனால் சிரஞ்சீவியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.
 
மத்திய மந்திரி சபை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அப்போது நடிகர் சிரஞ்சீவி மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்படுவார். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
 
மத்திய மந்திரி பதவியில் நீடிக்க வேண்டுமானால், பாராளுமன்ற இரு அவைகளில் ஏதாவது ஒன்றில் சிரஞ்சீவி உறுப்பினர் ஆக வேண்டும். டெல்லி மேல்-சபைக்கு ஆந்திராவில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த இடத்தில் சிரஞ்சீவியை நிறுத்தி மேல்-சபை எம்.பி. ஆக்க சோனியா முடிவு செய்துள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடை பெற உள்ளதால், அந்த மாநில மக்களை கவரும் வகையில் மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



Wednesday 16 November 2011

விஜயகாந்த் பெயரில் வசூல் வேட்டை!

 
Subject: விஜயகாந்த் பெயரில் வசூல் வேட்டை!
 
 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். தேமுதிக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அதில், அடையார் இந்திரா நகரில் உள்ள எஸ்.ஆர்.ராமசாமி நாயக்கர் இல்லம் என்ற பெயரில் புதுமனை புகுவிழா நடப்பதாகவும் இதில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் அச்சடித்து தமிழகம் முழுவதும் கொடுத்துள்ளனர்.
 
அழகர் சாமி என்பவர் இதுபோல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இந்த விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. மேலும், அழகர்சாமி எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை. எனவே, விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அழகர்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராஜன் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



ctor arrested on land grabbing charges

 

Actor and DMK MP Riteesh Kumar was arrested on Wednesday following land grab charges against him. Riteesh is an MP from the Ramanathapuram constituency and has acted in a couple of Tamil movies before obtaining a DMK seat to contest from Ramanathapuram.

The case against Riteesh is that he has obtained land illegally to the extent of about 2 acres in Sriperumbudhur, near Chennai using forged documents. Riteesh was last seen in the film Nayagan.

Tuesday 15 November 2011

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது!

 
 
 
நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.
 
‌த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.
 
இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.
 
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.
 
கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட நடிக‌‌ர் ‌‌‌ரி‌த்‌தீ‌ஷ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு புழ‌ல் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
 
இதுவரை ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா த‌ற்போது முத‌ன் முறையாக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.



எதிர்கட்சிகளை சிதைக்கும் வேலையை துவங்கினார் ஜெயலலிதா

 
 
 
பாமக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சுயேட்சை கவுன்சிலர்கள் உள்பட 38 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
 
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
 
அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நேற்று உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 5 பேரும், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், பாமக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேரும் கழகத்தில் இணைந்தனர்.
 
ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான காவேரி எஸ்.செல்வன் (7வது வார்டு), கிருஷ்ணராஜ் (8வது வார்டு), எஸ்.சத்தியமூர்த்தி (24வது வார்டு), எஸ்.தங்கவேல் (35வது வார்டு), கலையரசி பாலசுப்பிரமணியன் (37வது வார்டு), மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு 8வது வார்டு உறுப்பினர் வி.துளசிமணி, அரச்சலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி கோவிந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.ஆர்.தனபாலன்,
 
மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் செயலாளர் யு.ஆர்.சீனிவாசன், பாமக ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ரமேஷ், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் டி.ரங்கராஜன், தேமுதிகவின் ஈரோடு மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் ஜெ.ஹக்கீம், மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் எம்.கைலாசம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜோதிமணி கைலாசம், காசிபாளையம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 16 பேர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
 
அப்போது ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளர் காகம் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
மதுரை மாநகராட்சி சுயேச்சை உறுப்பினர்களான அ.மாரி (27வது வார்டு), மு.மோகன் (29வது வார்டு), சி.ஷாலினிதேவி (46வது வார்டு), ஜி.காதர்அம்மாள் (57வது வார்டு), என்.ராமசுப்பிரமணியன் (58வது வார்டு), ஏ.ஹமிதாபேகம் (96வது வார்டு), ப.சந்தியா (98வது வார்டு) ஆகியோரும், பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ் (எ) ராமச்சந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.செந்தில்குமார்,
 
மாவட்ட தலைவர் பொற்கை பாண்டியன், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழக்கடை இ.சண்முகம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.பாண்டிகாமாட்சி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.வல்லத்தரசு, மதுரை மாநகர் 2ம் பகுதிச் செயலாளர் எஸ்.ஜீவஜோதி, மாநகர் மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆர்.கே.சோமசுந்தரம், மதுரை மாநகர் 8ம் பகுதி மாணவர் அணி தலைவர் ஏ.சரவணகுமார், செயலாளர் ஏ.கண்ணன் மற்றும் மதுரை மாநகராட்சி சுயேச்சை உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 22 பேர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
 
அப்போது மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரும் உடன் இருந்தனர். தேமுதிகவின் தேனி மாவட்ட செயலாளரும், கூடலூர் நகர மன்றத் தலைவருமான ஆர்.அருண்குமார், புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் எம்.சிவக்குமார், கூடலூர் நகர மன்ற 9வது வார்டு உறுப்பினர் சிராஜுதீன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது, தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
 
ஜெயலலிதா, சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை அவர்கள் தெரிவித்துக்கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Monday 14 November 2011

தோண்டித் துருவி வழக்கு போடுகிறார்கள்-கருணாநிதி சலிப்பு

 
 

சென்னை: தி.மு.க.வினர் மீது 3 வழக்குகள், 4 வழக்குகள் என்று போடுகிறார்கள். இருக்கும் சட்டத்தை எல்லாம் தோண்டி துருவி எடுத்து சட்டத்தின் பெயரால் வழக்கு போட்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்திலும் வழக்கு போடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் இந்த இயக்கம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுகவைச் சேர்ந்தவரும், மூத்த வக்கீலும், முன்னாள் எம்.பியுமான சண்முகசுந்தரத்தின் மகன் மனுராஜுக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திருமணம் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வக்கீல் சண்முகசுந்தரம் முன்பு ஒரு வழக்கில் ஆதாரங்களை திரட்டியதற்காக தாக்கப்பட்டார். இதுபற்றி ஆளுநரிடம் முறையிட்டோம். சி.பி.ஐ. விசாரணை கேட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அவருக்கான மருத்துவச் செலவை மாநில அரசே கொடுக்கவேண்டும் என்றும் கூறியது.

இதை எதிர்த்து மாநில அரசு அப்பீல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. சண்முக சுந்தரத்துக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டிலும் தீர்ப்பு கிடைத்தது.

இன்று தி.மு.க.வினர் மீது 3 வழக்குகள், 4 வழக்குகள் என்று போடுகிறார்கள். இருக்கும் சட்டத்தை எல்லாம் தோண்டி துருவி எடுத்து சட்டத்தின் பெயரால் வழக்கு போட்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்திலும் வழக்கு போடுகிறார்கள். இந்த காலத்தில் சண்முகசுந்தரம் போன்றவர்களின் ஆற்றல் எவ்வளவு தேவை என்பதை புரிந்து இங்கு இதை சுட்டிக்காட்டுகிறேன். இவர்களுக்கெல்லாம் இந்த இயக்கம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காகத்தான் அரசு வழக்கறிஞர் பதவியும், தியாகத்தை மதித்து பாராளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கினோம். அன்று முதல் இன்று வரை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயக்கத்திற்கு ஏற்படும் துன்பத்தில் எல்லாம் பங்கெடுத்து, துடைக்கக்கூடிய ஆற்றலும் அக்கறையும் கொண்ட குடும்பம் சண்முகசுந்தரம்.

சட்டத்தை வைத்து நம்மை மடக்கி விடலாம் என்று நினைப்பவர்களை அடக்கி விடும் ஆற்றல் கொண்டவர். அவரது ஆற்றலை அறிவை இந்த இயக்கம் பயன்படுத்திக் கொள்கிறது. மணமகன் மனுராஜ் என் அன்பு மகள் கனிமொழியிடம் உதவியாளராக பணியாற்றி துணை நின்று வருகிறார். இன்றும் திகார் ஜெயிலில் இருந்து செய்திகளை அனுப்புபவராக இருக்கிறார். அந்த குடும்பத்தின், இயக்கம் மீதான தொடர்புகளை சுட்டிக்காட்டவே இவற்றையெல்லாம் நினைவுப்படுத்தினேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த சில வாரங்களாக மதுரை அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்த அழகிரி தனது ஓய்வை முடித்துக் கொண்ட பின்னர் கலந்து கொண்ட முதல் கட்சி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் எனது அரசு வேரறுக்கும்- ஜெயலலிதா உறுதி

 
 

சென்னை: தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள், நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

இதன் காரணமாக இவர்களை அவ்வப்போது நேரில் அழைத்து மாநாடு நடத்துவது மாநில முதல்வர்களின் வழக்கமாகும். அந்த வகையில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டு அரங்கில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி தொடக்க உரை நிகழ்த்தினார்.

ஜெயலலிதா தனது பேச்சின்போது குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களாகிய உங்களுடன் உரையாடுவது குறித்து மகிழ்ச்சி. மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கொள்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்கு இந்த மாநாட்டில் நடைபெறும் விவாதங்களும் மேற்கொள்ளப்படும். உறுதியான அணுகுமுறைகள் உதவும். ஒவ்வொரு முறையும் நான் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது நிர்வாகத்தை சீரமைக்கவும், சமூக, பொருளாதார, நிதிக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும் நான் சீர்திருத்தங்களை மேற்கொள்வது வழக்கம்.

இது எனது அரசின் நிர்வாக சிறப்புக்கு முத்திரை பதிப்பதாகும். இந்த அரசு தூய்மையான, ஒளிமறைவற்ற, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்கள் என் மீது தங்கள் நம்பிக்கையை தெரிவித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தீர்க்கமான முடிவை அளித்திருக்கிறர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பது எனது கனவாகும். ஏழை மற்றும் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை பெற்றிட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

சட்ட ஒழுங்கை திறமையாக பராமரிப்பது, மக்கள் பணிகளை திறமையாக நிறைவேற்றுவது, விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது, அடிப்படை வசதிகளை உருவாக்குவது, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது மேலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

சமூக விரோத சக்திகளையும், ரவடிகளையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு செய்தவர்கள் மீது விரைவாகவும், கடுமையாகவும் எடுத்துள்ள நடவடிக்கை மாநில அரசின் மீதும், காவல்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

சட்ட நடவடிக்கைகள்படி அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனது முந்தைய ஆட்சி காலங்களில் தமிழக காவல்துறை சிறப்பான முறையில் பணியாற்றி வந்துள்ளது. நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்து பிரச்சனைகளையும் அச்சமின்றி நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் அளித்தேன்.

தீவிரவாதம், நக்சலைட் போன்றவற்றால் நமது சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எப்போதுமே பயங்கரவாதத்தை திறமையாக ஒடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளேன்.

நமது சமுதாயத்தில் பிரிவினை சக்திகள் வளரவிடக்கூடாது என்றும் உறுதிபட நடவடிக்கை எடுத்து வந்துள்ளேன். பயங்கரவாதம் மற்றும் அடிப்படை வாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு நமது உளவுத்துறை வலுப்படுத்தப்பட வேண்டும். சட்ட ஒழுங்கை நிலை நாட்டும்போது சிறிய சம்பவங்களை கூட துச்சமாக கருதிவிடக்கூடாது.

அத்தகைய சிறிய சம்பவங்கள் ஒரு வகுப்பு மோதலாகவோ, ஜாதி மோதலாகவோ உருவெடுக்கலாம். இத்தகைய நிலையை நீங்கள் விழிப்புடன் இருந்து திறமையாக கையாளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காவல்துறையினருக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து நவீன ஆயுதங்களையும், தொலைத் தொடர்பு சாதனங்களையும் அளிப்பது அவசியம்.

கடந்த காலங்களில் இதற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையை இப்போதும் எனது அரசு வழங்கும். சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருப்பது ஊழல். மாவட்ட தலைவர்கள் என்ற முறையில் கலெக்டர்களுக்கு இத்தகைய நிலையை உருவாக்குவதற்கு கடுமையான பொறுப்பு இருக்கிறது.

லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகம் அரசிலும் எதிரொலிக்கும். எனவே மக்களுக்கு எதிர்பார்ப்புக்கிணங்க மாவட்ட கலெக்டர்கள் செயல்பட வேண்டும். விவசாயம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள், எஸ்.சி.எஸ்.டி, பின்தங்கியோர் மற்றும் மிகவும் பின்தங்கியோர் ஆகியோருக்கு முன்னரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, அடிப்படை வசதிகளில் கிராமப்புறங்களுக்கும் நகர்புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல், ஆண் பெண் ஆகியோரை சமமாக நடத்துதல், திறமையை வளர்ப்பது, வேலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.

நான் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு எடுத்துரைத்திருக்கிறேன். இவற்றை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். அதிகாரிகள் தங்களுடைய எண்ணங்களை சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.

எதிர்காலத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை முன் மாநிலமாக பின்பற்றக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகத்தை அளிக்க நான் திட்டமிட்டிருக்கிறேன். அதிகாரிகள் இதனை உருவாக்குவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

அமைச்சர்கள், உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா, டிஜிபி ராமானுஜம், அரசுத் துறை செயலாளர்கள், மாவட்டஆட்சித் தலைவர்கள், எஸ்.பிக்கள், மாநகர காவல்துறை ஆணையாளர்கள், ஐஜிக்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நாளை காலை கலெக்டர்கள் மாநாடும், பிற்பகலில் காவல்துறை அதிகாரிகளின் மாநாடும் நடைபெறும்.

டாக்ட்டர் ராமதாசின் கீழ்த்தரமான கிண்டல் பேச்சு

 
 
 
நேற்று சேலத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காவேரி மற்றும் காமராஜ் இருவரும், பா.ம.க விலிருந்து நீக்கப்பட பலரும், அடுத்து பா.ம.க விலிருந்து வெளியேற இருப்பாவர்களும் சேர்ந்து புதிய கட்சி துவங்கவுள்ளதாகவும், அது உண்மையான பா.ம.கவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுடன் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
''ஆரம்பகாலத்தில், நாங்கள் கட்சி விசயமாக மாருத்துவர் அவர்களை சந்தித்து பேச தைலாபுரம் வீட்டுக்கு சென்றால், உங்களுக்கு எல்லாம் வேலையில்லையா....? போய் உங்க வேலைய பாருங்க.... ஏன், அப்பாவுடைய வேலையும் கெடுத்து நீங்களும் வேலையில்லாம இருக்கீங்க.... போய் உங்க வேலையப்பருங்க என்று எங்களை திட்டுவார் அன்புமணி.
 
அதே போல மருத்துவரின் துணைவியாரும் எங்களை திட்டுவார், அதாவது அரசியல் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் அவர்களுக்கு உண்மையான ஈடுபாடு இருந்ததில்லை.
 
 
அப்படியிருக்க.... அன்புமணியை, கட்சியில் தனது அதிகாரம் குறையக்கூடது என்ற பயத்தில், தனக்கு அரசியல் வாரிசாக திணித்தார் ராமதாஸ்.
 
படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்தவரை கூட்டிக்கொண்டு வந்து கட்சி அலுவலகத்தில் உட்கார வைத்து, எங்களை எல்லாம் பார்த்து அன்புமணியை "சின்னஅய்யா" என்று சொல்லச் சொன்னார். அவரது பேச்சைக்கேட்டு நாங்களும் சொன்னோம்.
 
எல்லாவகையிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொன்னார்.
 
சரியான நேரத்தில் அவரை அமைச்சருமாக்கினார். இப்போது அன்புமணியை அரசியல் வாரிசாக ஏற்காத மூத்த தலைவர்களை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ராமதாஸ்.
 
இப்போது கட்சியில் அண்புமணியின் தலையீடும், குறுக்கீடும் அதிகமானது. அதனால் தான் கடந்த தேர்தல்களில் பா.ம.க தோல்வியடைந்துள்ளது என்று, கடந்த பொதுக்குழு கூடத்தில் வேல்முருகன் பேசியுள்ளார்.
 
 
அதற்கு பதில் சொன்ன மருத்துவர், எனக்கு பையன் இருக்கிறான் அரசியலுக்கு வாரான், உனக்கு குழந்தையில்லை அதுக்கு நான் என்னப்பா பண்ணட்டும்... என்று வேல்முருகனுக்கு குழந்தைகள் இல்லை என்பதை பற்றி இழிவாக பேசியுள்ளார்.
 
தலைவரது பேச்சால் மனமுடைந்த வேல்முருகன் கூட்டத்திலிருந்து கண்ணீரோடு வெளியே வந்தார். அன்று நடந்த கூட்டத்தில், மற்ற கட்சிக்காரர்களிடம் வேல்முருகனை அடிக்க சொல்லியுள்ளார் கோ.கா.மணி.
 
கட்சிக்காக உயிரை கொடுத்த தியாகிகளையெல்லாம் மறந்து விட்டு இப்போது தனது குடும்ப சொத்தாக்கிகொண்டார் ராமதாஸ். பா.ம.க விலிருந்து நீக்கப்படவர்கள் போக இன்னும் சிலர் வெளியேற காத்துக்கொண்டுள்ளனர்.
 
அவர்களுக்கும் சேர்ந்து விரைவில் புதிய கட்சியை துவங்குவோம்'' என்று காவேரியும், காமராசும் தெரிவித்தனர்.




ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு

 
 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.
 
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்?
 
பதில்: அவர் ஒரு முட்டாள்.
 
கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா?
 
பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்று கூற நான் யார்.
 
கேள்வி: அன்னா ஹசாரே தனது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியை நாட தயங்குகிறாரே?
 
பதில்: 1962, 1965ம் ஆண்டுகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பங்கை முன்னாள் பிரதமர்கள் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும் பாராட்டியுள்ளனர் என்றார்.
 
கடந்த 1975 ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரசர நிலைப் பிரகடனப்படுத்தியபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்த சுப்பிரமணிய சாமி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2ஜி ஊழல் குறித்து சாமி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.



ஆள்மாறட்ட அமைச்சரை 'அரெஸ்ட்' செய்ய முடியாமல் போலீஸ் திணறல்!

 
 
 
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய புதுச்சேரி அமைச்சர் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய முடியாமல் தமிழக போலீசார் திணறிவருகின்றனர். புதுச்சேரி போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால் கைது செய்யப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
புதுச்சேரியில் கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த அக்டோபர் மாதம் திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த்து.
 
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவான கல்யாணசுந்தரம், இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
 
இதையடுத்து அவரை கைது செய்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும் கடந்த வாரம் அமைச்சர் மீதான முன்ஜாமீன் மனுவை நீதிபதி பழனிவேலு தள்ளுபடி செய்தார்.
 
போலீசார் திணறல்
 
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனையறிந்த அமைச்சர் மீண்டும் தலைமறைவனார். சனிக்கிழமையன்று திண்டிவனம் நீதிமன்றத்திலும் அவர் ஆஜராகவில்லை.
 
இந்த நிலையில் கல்யாண சுந்தரந்தை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க புதுவை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். இருப்பினும் உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால் ஆள்மாறட்ட அமைச்சரை கைது செய்ய முடியாமல் தமிழக போலீசார் திணறிவருகின்றனர்.
 
உச்சநீதிமன்றத்தில் மனு
 
இந்த நிலையில் அமைச்சர் கல்யாணசுந்தரம் முன் ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை அடுத்தே கல்யாண சுந்தாரம் கைதாவாரா இல்லையா என்பது தெரியவரும்.



மதுரைக்கு வந்த 'பொட்டு'-டெல்லிக்கு ஓடிய அழகிரி!!

 
 
திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள முதல் பிரமுகர் என்ற பெருமையை பொட்டு சுரேஷ் பெற்றுள்ளார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக மதுரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை சந்திக்க விரும்பாத மு.க.அழகிரி சென்னை வழியாக டெல்லிக்குப் போய் விட்டார்.
 
மதுரை வட்டாரத்தை கடந்த திமுகஆட்சிக்காலத்தின்போது கலக்கி வந்தவர் சுரேஷ். 'பொட்டு சுரேஷ்' என்றால் மதுரை பக்கத்து ப்ரீகேஜி பாப்பாக்களுக்குக் கூடத் தெரியும். அந்த அளவுக்கு படு பாப்புலராக வலம் வந்தவர் சுரேஷ். அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த இவரைப் பார்த்து முன்னாள் திமுக அமைச்சர்களே நடுங்குவார்களாம். தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி விசிட் அடித்து புரமோஷன் பட்டியல், டிரான்ஸ்பர் பட்டியல் உள்ளிட்ட பணிகளை அழகிரி சார்பில் முடித்துக் கொடுப்பவராக சக்தி வாய்ந்தவராக திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ்.
 
அப்படிப்பட்ட பொட்டு சுரேஷை அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பிடித்து உள்ளே போட்டனர். குண்டர் சட்டமும் பின்னாலேயே பாய்ந்து வந்தது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொட்டு சுரேஷ், தன்னை குண்டாஸில் கைது செய்தது செல்லாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம்,கைது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
 
இதையடுத்து அவர் விடுதலையாகும் சூழல் எழுந்தது. இருப்பினும் திடீரென அவர் மீது இன்னொரு வழக்கை ஏவி விட்டனர். அதில் ஜாமீன் கோரி மனு செய்தார் பொட்டு. அதில் ஜாமீன் கிடைத்ததால் இன்று அவர் விடுதலையாகி வெளியே வந்தார்.
 
பாளையங்கோட்டை சிறைக்கு வந்த பொட்டுவின் ஆதரவாளர்கள், சுரேஷை ஆரவாரத்தோடு மதுரைக்கு அழைத்து வந்தனர்.
 
மதுரைக்கு வந்ததும் முதலில் அழகிரியைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சுரேஷ். ஆனால் இப்போது அவரை சந்திக்க விரும்பவில்லையாம் அழகிரி. இதனால் அவர் நேற்று இரவோடு இரவாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். இன்று காலை டெல்லிக்குப் போயே போய் விட்டார்.
 
இதனால் பொட்டு சுரேஷ் தரப்பு ஏமாற்றமடைந்துள்ளது. இருப்பினும் கண்டிப்பாக அண்ணனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.