Followers

Saturday, 8 October 2011

திமுகவிலிருந்து வெளியேறும் பரிதி!!

 
 
இதுவரை நிலமோசடி வழக்கு, ஆள் கடத்தல்- மிரட்டல் வழக்குகளால் ஆடிப்போயிருந்த திமுக வட்டாரம், அடுத்த அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
 
திமுகவின் நீண்ட நாள் விசுவாசிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இழுக்கும் அல்லது கலைக்கும் வேலையை ஆளும்கட்சியினர் செய்ய ஆரம்பித்திருப்பதே அது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர்.
 
இதன் முதல் நகர்வாக, சென்னை திமுகவின் முக்கிய தூண் என வர்ணிக்கப்பட்ட, திமுக விசுவாசியும் முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி திமுகவிலிருந்து விலகப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.
 
இதன் முதல்படியாக, கட்சியில் தனக்கு வழங்கப்பட்டிருந்த துணைப் பொதுச் செயலர் பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டார் பரிதி.
 
எழும்பூர் திமுக வட்டாரத்தில் திமுகவினர் 3 பேர் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்தது பரிதி இளம்வழுதியை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்ததால், தலைமையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜினாமாவை அறிவித்துள்ளார் பரிதி இளம்வழுதி.
 
இன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், "திமுகவில் தாங்கள் கடைபிடித்து வரும் உட்கட்சி ஜனநாயகத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். வாழ்க உட்கட்சி ஜனநாயகம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முக ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்பட்ட பரிதி இளம்வழுதியின் இந்த ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்தே அவர் விலகப் போவதாகவும் தெரிகிறது.



திமுக அதிமுக வேட்பாளர்களாக மாமியார் மருமகள் போட்டி

 
 
 
புதுக்கோட்டை நகரசபையில் அ.தி.மு.க தி.மு.க. வேட்பாளராக மருமகள் மாமியார் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுக்கோட்டை நகராட்சி 24வது கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மலர்விழி போட்டியிடுகிறார். ஏற்கனவே கவுன்சிலராக இருக்கும் இவருக்கு கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
இவரை எதிர்த்து அவரது மாமியார் ஜோதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது கணவர் லட்சுமணன், நகரசபை முன்னாள் தி.மு.க. உறுப்பினர் ஆவார்.
 
மேலும் ஜோதி அ.தி.மு.க. வேட்பாளர் மலர்விழியின் கணவர் முத்துவின் சின்னம்மாள். தேர்தல் பிரசாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஒரே வார்டில் அதுவும் பிரதான கட்சியின் வேட்பாளராக மாமியாரும், மருமகளும் போட்டியிடுவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்! - பால் தாக்கரே

 
 
 
ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
 
மேலும், 'இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை கிழிந்து விடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மும்பையில் நேற்று தசரா பேரணியில் பேசிய தாக்கரே, "ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு தமாஷ். ஒருபக்கம் இவர் தொழிலதிபர்களிடம் பணத்தை வாங்குறார். இன்னொரு பக்கம் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.
 
இப்படி பொய்யான நோக்கத்துடன் செயல்படும் இவரால் இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. இதைச் சொல்லும் எங்களுடன் ஹஸாரே விரோதம் பாராட்டுவது தேவையற்றது. மேலும் அவர் மீதான என் விமர்சனங்களை கிண்டலடித்துள்ளார் ஹஸாரே. அவர் என்னைவிட வயதில் இளையவர். அதனால்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்," என்றார்.
 
ஏற்கெனவே ஒருமுறை தாக்கரே இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, தனக்கு பணம் தந்த நிறுவனங்களின் பெயர்களை தாக்கரே சொல்வாரா? எனக்கு தொழில் அதிபர்கள் பண உதவி செய்வதாக பால் தாக்கரே நிரூபித்து விட்டால், நான் என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறேன், என ஹசாரே சவால் விட்டார்.
 
ஆனால் இப்போது மீண்டும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் தாக்கரே.
 
 


'போனா போகட்டும் ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க...': தேமுதிக பிரச்சாரத்தில் விஜயகாந்த் பாட்டு

 
 
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் உடன்பாடு எட்டாததையடுத்து, அக்கூட்டணியில் இருந்து விலகியது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு செய்தது.
 
 
இதையடுத்து தனது கட்சி வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரைப் போலவே அவரது மனைவியும் நீங்கள் (விஜயகாந்த்) தெற்கே என்றால், நான் வடக்கே என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
 
தேமுதிக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைவர் பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க, அவர் நடித்த படங்களின் பாடல்களை ஒலிக்க செய்து, தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
 
 
சென்னை வளசரவாக்கத்தில் இன்று (08.10.2011) காலை தேமுதிக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் வேல்முருகன் பிரச்சாரத்தை துவங்கினார். அவர் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தில், விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வரும்,
 
 
''சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி... வட்டி வட்டியும் முதலுமா வாங்கிக்கொள்ளடி... போனா போகுது ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க பார்ப்பதென்னடி... வீணா வரிஞ்சிக்கட்டி வம்பிழுத்ததாலே இப்போது மாட்டிக்கிட்டு முழிப்பதென்னடி...'' என்ற பாடல் ஒலிப்பரப்பட்டது. இந்த பாடல் ஒலிப்பரப்பட்டபோது, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.



ராகுல் காந்தியிடம் சிரஞ்சீவி வேண்டுகோள்

 
 
 
ஆந்திர மாநிலத்தில் தொடரும் தெலுங்கானா பிரச்சனையில் உடனடி முடிவு எடுக்குமாறு ராகுல்காந்தியிடம், சிரஞ்சீவி பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
தெலுங்கானா பிரச்சனை ஆந்திர முழுவதும் பூதகரமாக வெடித்து, இன்று 26 நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான சிரஞ்சீவி, காங்கிரஸ் பொது செயலர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
 
அப்போது, ஆந்திராவில் உள்ள விவசாய நிலவரம் மற்றும் தெலுங்கானா போராட்டத்தால் மாநிலத்தில் நிலவிவரும் பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் நிலக்கிரி சுரங்க தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால், மாநிலத்தில் தொடரும் மின்வெட்டு குறித்தும் பேசியதாக சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
தெலுங்கானா விவகாரத்தில் உடனடி தீர்வு காண, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், தனி மாநில கோரிக்கையில் தாமதம் காட்டுவதால், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்தாக, சிரஞ்சீவி தெரிவித்தார்.
 
முன்னதாக, டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க சிரஞ்சீவி திட்டமிட்டதாகவும், அதற்கான நேரம் ஒதுக்கப்படாமல் போனதால் ராகுல் காந்தியை, சிரஞ்சீவி சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



'ஆர்எஸ்எஸுக்காக பிரச்சாரம் செய்யும் ஹஸாரே' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
 
 
ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தன்னார்வலர்கள் நிறைந்துள்ளனர். எந்த பதவியையும் எதிர்ப்பார்க்காமல் தங்கள் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர், என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டமே ஆர்எஸ்எஸ் பாஜக தூண்டுதலின் பேரில் நடந்துவரும் ஒரு அரசியல் சதி என தாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆனால் தமது போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கு எதுவும் இல்லை என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
நவராத்திரி ஊர்வலத்தில் சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், "அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவும் பங்களிப்பும் உண்டு. இந்த போராட்டத்தில் ஏற்கெனவே எங்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த பதவியும் அந்தஸ்தும் எதிர்ப்பாக்காமல் பணியாற்றி வருகின்றனர்," என்று அவர் கூறினார்.
 
அவரது இந்த அறிவிப்பைத் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய சிங் ஹசாரே மீது குறைகூறியுள்ளார்.
 
"ஹசாரே மற்றும் ராம்தேவின் பிரசாரங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுபவை என நான் முன்பிலிருந்தே கூறி வருகிறேன். இந்த உண்மையை மோகன் பகவத் இப்போது ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. என்னுடைய கூற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. ஹசாரேவின் பிரசாரம் ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்படுகிறது என நான் எப்போது கூறினாலும், என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் (ஹஸாரே) கூறுவார். இப்போது நான் மனநல மருத்துவமனைக்கு போக வேண்டுமா, வேண்டாமா என்பது தெரியவில்லை," என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
 
'காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்'
 
இதற்கிடையே காங்கிரஸுக்கு எதிரான தனது தேர்தல் பிரச்சாரத்தை அன்னா ஹசாரே தொடங்கிவிட்டார்.
 
இதன் முதல் கட்டமாக 'ஊழல் அரசு' என்ற பத்து நிமிட குறுவட்டு (சிடி) மூலம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜன் லோக்பால் மசோதா கொண்டுவர தவறிய காங்கிரஸ் கட்சியை ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் தொகுதிக்கான மக்களவை இடைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
 
அடுத்து, ஹஸாரேயுடன் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய அணி ஹிஸ்ஸார் தொகுதியில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


விஜயகாந்த்தின் பிரிப்பு பேச்சு-தலித்கள் கொந்தளிப்பு- கொடும்பாவி எரிப்பு

 
 
 
தலித்களுக்குத் தனித் தொகுதி, பொதுத் தொகுதி என தனித் தனியாக தொகுதிகள் இருக்கக் கூடாது. அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டும் என்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து தலித் மக்கள் விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்துள்ளனர்.
 
தனித் தொகுதி, பொதுத் தொகுதி என்று தேவையில்லை. ஒரே தொகுதியாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது பிரச்சினையாகியுள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேசியதால் கொதிப்படைந்துள்ள தலித் மக்கள் தற்போது விஜயகாந்த்தின் பேச்சால் மேலும் கோபமடைந்துள்ளனர்.
 
நேற்று தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுத்தொகுதி, தனித் தொகுதி என்று தேர்தல் பிரித்து வைத்திருப்பது தவறு. அனைத்து தொகுதிகளையும், பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்றார்.
 
இதற்கு தமிழ்ப் புலிகள் என்ற தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பேச்சைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் கொடும்பாவியையும் எரித்தனர்.
 
இந்த சம்பவம் நடந்தபோது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
 
தொடர்ந்து தலித்களுக்கு எதிராக பொருள்படும்படியாக தேமுதிக உயர் மட்டத் தலைவர்கள் பேசி வருவதால் தலித் மக்கள் கொதிப்படைந்து வருவது, தேமுதிக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.



Friday, 7 October 2011

வெள்ளைக் கொடி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழங்கு விசாரணைகளின் போது பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு வழங்கப்பட்டதாக அறியக் கிடைத்து எனக் கூறப்பட்டமையும் குற்றமாகும் என்று பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே தெரிவித்தார். அவசரகால சட்டவிதிமுறைகளை மீறி இனவாத உணர்வுகளைத் தூண்டும் மற்றும் மக்களை குழப்பமடையச் செய்யும் கருத்தினைத் தெரிவித்தமை சரத் பொன்சேக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களின் உள்ளடக்கமாகும்.

இத்தகைய கருத்தினை சரத் பொன்சேக்கா கூறியமை, சன்டே லீடர் செய்தி ஆசிரியர் பிரெட்ரிகா ஜேய்ன்ஸ் அளித்த சாட்சியத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரிகேடியர் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சாட்சியங்களின் பிரகாரம் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த உத்தரவு வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டதாகவும் புவனேக அலுவிஹாரே கூறினார்.

எனினும் அவ்வாறான உத்தரவு வழங்கப்பட்டமை குறித்து இரண்டு ஊடகவியலாளர்கள் ஊடாக தெரியவந்தது என்று சரத் பொன்சேக்காவின் பிரதிவாதி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் தாம் அறிந்த வரையில் அவ்வாறான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொன்சேக்கா தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வெள்ளைக்கொடி ஏந்தியவாறு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடப்பட்டதாக வதந்தி பரப்புவதற்கு சரத் பொன்சேக்கா முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் கூறினார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் புதன்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டன.

விநியோகிக்கப்படாத நிலையில் 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள்!

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சுமார் 40 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாத நிலையில் தபால் நிலையங்களில் எஞ்சியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிக்கிறது. வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால் மாஅதிபர் ஆர்.டி.பி.காமினி தெரிவிக்கிறார். இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்லுக்காக 15 இலட்சத்து 86 ஆயிரத்து 867 உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் செயலகத்தினால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

I am Proud to be an Indian..!!??

 



I am Proud to be an Indian..!!??

Thursday, 6 October 2011

உள்ளாட்சியை எங்களுக்கு தந்தால் நல்லாட்சியை உங்களுக்கு தருவோம்: மதுரையில் விஜயகாந்த் பேச்சு

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை விஜயகாந்த் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் கவியரசு மற்றும் தே.மு.தி.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மதுரை வந்தார்.
 
ஜெய்ஹிந்த்புரம் அருகில் சோலையழகுபுரத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகே திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். காலம் நேரம் மாறுவது உண்டு. தே.மு.தி.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டணி வைத்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. மேயர் கவியரசு மற்றும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியை நீங்கள் எங்களுக்கு தந்தால் நல்லாட்சியை உங்களுக்கு நாங்கள் தருவது உறுதி.
 
மதுரையில் மேயர் பதவிக்கு போட்டியிடும் 2 வேட்பாளர்கள் கட்ட பஞ்சாயத்து செய்தவர்கள். தே.மு.தி.க. வேட்பாளர் கவியரசு நல்லவர், வல்லவர். எனவே அவரை வெற்றி பெற செய்து அவரிடம் மாநகராட்சியை கொடுங்கள். மதுரை எனக்கு நன்றாக தெரியும். நான் இந்த வழியாக அடிக்கடி மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளேன். யார்? யார்? என்னென்ன? செய்வார்கள் என்பது எனக்கு தெரியும்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் சுந்தரராஜன், ஏ.கே.டி.ராஜா ஆகியோரை வெற்றி பெற செய்தீர்கள். அவர்கள் தற்போது உங்களை தேடி வருகிறார்கள். அதுபோல இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அவர்கள் உங்களை தேடி வருவார்கள். வரியை குறைப்பேன். அதை குறைப்பேன், இதை குறைப்பேன் என்று கடந்த முறை இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.
 
உள்ளாட்சி தேர்தல் என்பது உங்கள் ஆட்சி. மக்களின் ஜீவாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதுதான் உள்ளாட்சி தேர்தல். ஓட்டு கேட்க வரும்போது உங்களிடம் கெஞ்சுவார்கள். பின்னர் நீங்கள் அவர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்படும். திரும்பவும் கட்ட பஞ்சாயத்துகாரர்களிடம் மாநகராட்சியை கொடுத்து விடாதீர்கள். கடந்த 2 மாதமாக தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். நான் எனது சொந்த பணத்தில் தாய்மார்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்யுங்கள்.
 
இந்த தேர்தலில் மேயர் வேட்பாளர் கவியரசுவை வெற்றி பெற செய்தால் தான் மதுரைக்கு மீண்டும் மீண்டும் வந்து உங்களது குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சிக்காரர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். இதை உறுதியாக சொல்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 எம்.எல்.ஏ.க்களை தந்து இருக்கிறீர்கள். அடுத்த தேர்தலில் எங்களை ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள். ரமணா படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஊழலை எவ்வாறு நான் எதிர்க்கிறேன் என்பதை பார்த்து இருப்பீர்கள். அதுபோல ஊழலின் ஆணி வேரை அகற்ற வேண்டும். ஒரு சாதாரண பெண் கடையில் காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்குகிறார். அதுபோல கட்சியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.



அதிமுக வேட்பாளர் தந்த மன்னிப்பு கடிதம்

 
 
 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் அதிகளவு இஸ்லாமியர்கள் வாழும் நகராட்சி. இங்கு திமுகவில் நகர மன்ற தலைவர் பதவிக்கு சிட்டிங் சேர்மன் சிவாஜிகணேசன், அதிமுகவில் கவுன்சிலர் நிலோபர்கபில், தேமுதிகவில் சங்கர் நின்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
 
இந்த நகராட்சியில் உள்ள 36 வார்டில் இஸ்லாமிய ஜமாத்துடன் ஒப்பந்தம் போட்டு அதிமுக வேட்பாளர்கள் 15பேர், ஜமாத் வேட்பாளர்கள் 21 பேரை கவுன்சிலர்க்கு நிறுத்தியுள்ளது. திமுக 36 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
 
 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஜமாத் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றை தந்துள்ளார் என்ற தகவல் வாணியம்பாடி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2001 - 2006 வரை வாணியம்பாடி நகராட்சி மன்ற தலைவராக நிலோபர்கபில் இருந்தார்.
 
இவர் சுயேட்சையாக போட்டியிட்டு ஜமாத்களின் ஆதரவோடு வெற்றி பெற்று அதன்பின் அதிமுகவில் தன்னை ஐக்கியப்டுத்திக்கொண்டார்.
 
அதன்பின் வெற்றி பெறவைத்தவர்களுக்கு வாக்கு தந்தபடி எந்த நல்லது செய்யவில்லையென கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட நிலோபரை தோற்கடித்தனர்.
 
தற்போது மீண்டும் தன்னை தோற்கடித்துவிடுவார்கள் என பயந்து பாதிக்கு பாதி கவுன்சிலர்களுக்கு ஒப்புக்கொண்ட நிலோபர், நான் சேர்மனாக இருந்தபோது ஜமாத்தின் பேச்சை மீறி நடந்தேன் அதற்க்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
 
என்னை இந்த முறை வெற்றி பெற வைத்தால் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நடப்பேன் என எழுதி மன்னிப்பு கேட்டு ஆதரவை பெற்றுள்ளார் எனக்கூறப்படுகிறது.
 
அது எப்படி அவர் மன்னிப்பு கேட்டு, நீங்கள் சொல்கிறபடி நடப்பேன் என வாக்குறுதி தரலாம் என வறுத்தத்தோடு, பரபரப்பாக விவாதித்து வருகின்றனர் அதிமுகவினர்.



தேய்பிறை பயத்தில் போட்டியிடாத தி.மு.க.,

 
 
 
 
 
சாயல்குடியில் கடந்த லோக்சபா தேர்தலில் மற்ற கட்சிகளை விட ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று தி.மு.., முதன்மை இடத்தை பெற்றது. அடுத்து நடந்த சட்டசபைத் தேர்தலில், வித்தியாசம் 300 ஓட்டாக குறைந்தது. இதன் எதிரொலியாக, நடக்கவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக யாரும் போட்டியிட முன்வரவில்லை.
. தி. மு. ., சார்பில் நகர் தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் சேர்த்து 15 வார்டுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தி. மு . ., சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில், தனது ஜாதிக் கூட்டணிக்கு வேலை செய்வதா? இல்லை... . தி. மு. ., விற்கு எதிராக வேலை செய்வதா? யாருக்கு ஓட்டளிப்பது என்ற கேள்வி மாஜி ஆளும் கட்சி தொண்டர்கள் மனதில் எழுந்துள்ளது.
இது குறித்து தி. மு. ., நகர் பொறுப்பில் உள்ள முக்கியஸ்தரிடம் கேட்ட போது: சாயல்குடியை பொறுத்தவரை மக்கள் ஜாதிக் கூட்டணிக்குள் இருக்கின்றனர். இதில், "நாங்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தால், இங்கு தி. மு. ., விற்கு செல்வாக்கு தேய்பிறையைப் போல் குறைந்து, . தி. மு. ., விற்கு வளர் பிறையைப் போல் செல்வாக்கு கூடிவிட்டது. . தி. மு. ., கோட்டையாகி விட்டது, என்று மற்ற கட்சிக்காரர்கள் சொல்வதற்கு இடம் கொடுத்ததாகிவிடும்' எனக் கருதி இத்தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டோம், என்றார்.