Followers

Thursday 6 October 2011

அதிமுக வேட்பாளர் தந்த மன்னிப்பு கடிதம்

 
 
 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் அதிகளவு இஸ்லாமியர்கள் வாழும் நகராட்சி. இங்கு திமுகவில் நகர மன்ற தலைவர் பதவிக்கு சிட்டிங் சேர்மன் சிவாஜிகணேசன், அதிமுகவில் கவுன்சிலர் நிலோபர்கபில், தேமுதிகவில் சங்கர் நின்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
 
இந்த நகராட்சியில் உள்ள 36 வார்டில் இஸ்லாமிய ஜமாத்துடன் ஒப்பந்தம் போட்டு அதிமுக வேட்பாளர்கள் 15பேர், ஜமாத் வேட்பாளர்கள் 21 பேரை கவுன்சிலர்க்கு நிறுத்தியுள்ளது. திமுக 36 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
 
 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஜமாத் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றை தந்துள்ளார் என்ற தகவல் வாணியம்பாடி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2001 - 2006 வரை வாணியம்பாடி நகராட்சி மன்ற தலைவராக நிலோபர்கபில் இருந்தார்.
 
இவர் சுயேட்சையாக போட்டியிட்டு ஜமாத்களின் ஆதரவோடு வெற்றி பெற்று அதன்பின் அதிமுகவில் தன்னை ஐக்கியப்டுத்திக்கொண்டார்.
 
அதன்பின் வெற்றி பெறவைத்தவர்களுக்கு வாக்கு தந்தபடி எந்த நல்லது செய்யவில்லையென கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட நிலோபரை தோற்கடித்தனர்.
 
தற்போது மீண்டும் தன்னை தோற்கடித்துவிடுவார்கள் என பயந்து பாதிக்கு பாதி கவுன்சிலர்களுக்கு ஒப்புக்கொண்ட நிலோபர், நான் சேர்மனாக இருந்தபோது ஜமாத்தின் பேச்சை மீறி நடந்தேன் அதற்க்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
 
என்னை இந்த முறை வெற்றி பெற வைத்தால் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நடப்பேன் என எழுதி மன்னிப்பு கேட்டு ஆதரவை பெற்றுள்ளார் எனக்கூறப்படுகிறது.
 
அது எப்படி அவர் மன்னிப்பு கேட்டு, நீங்கள் சொல்கிறபடி நடப்பேன் என வாக்குறுதி தரலாம் என வறுத்தத்தோடு, பரபரப்பாக விவாதித்து வருகின்றனர் அதிமுகவினர்.



No comments:

Post a Comment