Followers

Wednesday 5 October 2011

ஜெ., பாணியில் பிரேமா: இது தகுமா…!

 

""ஹல… ஹல… ஹல… மைக் டெஸ்டிங் "ஒன்… டூ… த்ரி…' இவ்வட்டார பெருமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்… நம் உள்ளங்களில் நிரந்தரமாக குடியிருக்கும் நம் கேப்டன் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து "அண்ணியார்' (பிரேமலதா), இங்கே பிரசாரம் செய்ய வருகிறார்.

எனவே, தாய்மார்களும்… கழக கண்மணிகளும்… பெரும் திரளாக வரும்படி மதுரை 91வது வட்ட தே.மு.தி.க., சார்பில் தங்களின் பொற்பாதம் தொட்டு கேட்டு கொள்கிறோம்," என, மைக்கில் தொண்டர் ஒருவர், ரொம்ப நல்லாவே கூவி கொண்டிருந்தார்.மதுரை ஜீவாநகருக்கு மாலை 3 மணிக்கு பிரேமலதா வருவதாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக்காக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் மதியம் 1 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராயினர்."அம்மா… (ஜெயலலிதா அல்ல) எப்போ வருவாங்க…?,' என, தொண்டர்களிடம் அவ்வப்போது கேட்டு கொண்டனர். நேரம் ஆனதே தவிர "அம்மா' வருவது மாதிரி தெரியலே. மாலை 4.30 மணி ஆனது.காத்திருந்து… காத்திருந்து… காலங்கள் போகுதம்மா. பூத்திருந்து… பூத்திருந்து பூவிழி நோகுதம்மா,' என்ற விஜயகாந்த் நடித்த பாடலை போலீசார் முணுமுணுத்து கொண்டனர்.

""ஆண்டாள்புரம் மேம்பாலத்தில் அண்ணியார் கார் வந்து கொண்டிருக்கிறது," என, ரொம்ப நேரமாக மைக்கில் "பீலா' விட்டனர். ""அப்பாடா ஒரு வழியா இப்போதாவது (மாலை 5.15 மணி) வந்தாங்களே," என, காத்திருந்த போலீசார் பெருமூச்சு விட்டனர்.

இப்போ பிரேமலதா ஸ்பாட் வந்துட்டாங்க…""தி.மு.க., என்றால் "தில்லு முல்லு கட்சி'ன்னு அர்த்தம்," என, எடுத்து எடுப்பிலேயே தடாலடியாக பிரசாரத்தை துவக்கினார் பிரேமலதா.மேயர் வேட்பாளரை (கவியரசு) பார்த்து ""இவர் ஒரு ரூபாய் ஊழல் செஞ்சார்ன்னு யாராவது சொல்ல முடியுமா?," என, மக்களை பார்த்து கேட்டார்.

"இல்லே… இல்லே…' என்றனர்.குசும்பு வாலிபர் ஒருவர், ""போகப்போகத்தானே தெரியும்?," என, தன் பங்கிற்கு "பிட்டை' போட்டார்.""இந்த தேர்தல்ல ஊழல்வாதிகளை விரட்டுவீங்களா…? கேப்டன் சொன்னதை செய்வீங்களா…? என, ஜெ., பாணியில் கேட்டார் பிரேமலதா."செய்வோம்… செய்வோம்…' என, மக்கள் குரல் எழுப்பினர்.15 நிமிட பிரசாரத்தை முடித்து விட்டு அடுத்து பாயின்ட்டுக்கு புறப்பட்டார் பிரேமலதா.

(dm)


Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்

No comments:

Post a Comment