Followers

Wednesday, 5 October 2011

தபால் வாக்குகள்: மாநகராட்சி ஆணையர் அறிவுரை

 
 
 

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தவறாமல் தபால் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் அலுவலர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் வாக்குசீட்டு மூலம் பதிவு செய்திடலாம்.

தேர்தல் பணி நியமன ஆணை நகலுடன் தாங்கள் வாக்களிக்க வேண்டிய பகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வாக்குப் பதிவு நாளுக்கு 7 நாள்கள் முன்னதாகவோ அல்லது தேரதல் நடத்தும் அலுவலரால் நிர்ணயிக்கப்படும் குறுகிய காலத்திற்குள்ளோ விண்ணப்பிக்க வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச் சான்று பெற்றுக் கொள்ளலாம். வாக்குச்சீட்டில் விரும்பும்

வேட்பாளருக்கு வாக்குப்பதிவு செய்து, உறுதிமொழியினை பூர்த்திசெய்து கையொப்பமிட்டு அதனை உறையிலிட்டு தேரதல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பணியினை தவறாது செய்வதுடன் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளவேண்டும்.

(di)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்

No comments:

Post a Comment