Followers

Monday, 3 October 2011

தி.மு.க. பெண் வேட்பாளருக்கு அடி-உதை

 
 
 
தி.மு.க. பெண் வேட்பாளரை அடித்து உதைத்த தி.மு.க. முன்னாள் தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
விழுப்புரம் மாவட்டம், தி.மு.க. ஒலக்கூர் முன்னாள் ஒன்றியச் செயலராகவும், ஒலக்கூர் ஒன்றிய தலைவராகவும் இருந்தவர் சொக்கலிங்கம் (60). இவரது மனைவி சீத்தாபதி சொக்கலிங்கம், தற்போது ஒன்றிய தலைவராக உள்ளார்.
 
பாங்கொளத்தூர் ஊராட்சித் தலைவராக ராஜமாணிக்கம் என்பவரை, போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என, சொக்கலிங்கம் தரப்பினர் ஊர்க் கட்டுப்பாடு விதித்தனர். இதை எதிர்த்து, அதே கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சபிதா (30) ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இதனால், கடும் ஆவேசமடைந்த சொக்கலிங்கம், அவரது ஆதரவாளர்கள், வேட்பாளர் சபிதாவை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சபிதா ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம், அவரது மகன் செந்தில்குமார், உறவினர்கள் வரதராஜ், அன்பழகன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.



No comments:

Post a Comment