சென்னை மேயர் பதவிக்கு கட்சிகளைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 32 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 25 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மீதி 39 பேரில் சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன், எஸ்.கோவிந்தராஜுலு, கே.தமிழ்வேந்தன், என்.நந்தகோபால், சி.முத்துக்குமார், டி.நித்யானந்தம், பி.சுரேஷ்குமார் ஆகிய 7 பேரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது 32 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விவரம்: மா.சுப்பிரமணியன் (தி.மு.க.), சைதை சா. துரைசாமி (அ.தி.மு.க.), சைதை ரவி என்கிற பி.ரங்கராமானுஜம் (காங்கிரஸ்), கோ.வேல்முருகன் (தே.மு.தி.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), ந.மனோகரன் (ம.தி.மு.க.), எஸ்.அமீர் ஹம்சா (விடுதலைச் சிறுத்தைகள்), பி.வில்சன் என்கிற வின்சென்ட் (தேசியவாத காங்கிரஸ்), பி.ஜி.பரமேஷ்பாபு (பகுஜன் சமாஜ் கட்சி), ஜெ.மோகன்ராஜ் (ஜெபமணி ஜனதா)
சுயேச்சைகள்: பி.அப்துல் பாரூக், ஜி.அப்துல் ஹமீத், எம். அருள், அருந்ததி ராமச்சந்திரன், ஏ.அனந்தராமன், மா.ராசா, எம்.பி.ராஜா என்கிற பீர்ராஜா, எஸ்.கந்தசாமி, மா.கலையரசன், கே.எஸ். கோபி, துறைமுகம் சந்திரன் என்கிற டி. சந்திரகுமார், இ.சரத்பாபு, டி. தாசப்பிரகாஷ், கோ.தேவதாஸ், கே.பிரிதிவ், எ.எம். புரோஸ்கான், இ. ரேணுகுமார், ரா.லிங்கேசன், இ.விஸ்வநாதன், நெ.ஜெகதீஸ்வரன், எஸ்.ஜெயராஜ், பி.ஹமீது ஹுசைன்.
(di)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
No comments:
Post a Comment