Followers

Wednesday, 5 October 2011

வாக்காளர்களுக்கு பிரிஜ், வாஷிங் மிஷின், மொபைல் போன்…..

 

கடலூர் மாவட்டம் வடக்கு ஊராட்சியில், 7,830 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சித் தலைவர் பதவிக்கு, குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் கோவிந்தராஜ் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த, அன்புமணி, ஜெகன், ராமசாமி போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கிடையே உள்ள போட்டியால், ஊராட்சியில் வசிப்பவர்களுக்கு "ஜாக்பாட்' அடித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும், பிரிஜ் அல்லது வாஷிங் மிஷின், குடும்பம் அல்லாத தனி வாக்காளர்களுக்கு, 4,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், இளைஞர்களாக இருந்தால், அவர்கள் விளையாடி மகிழ, கிரிக்கெட் பேட் மற்றும் உபகரணங்கள் என வேட்பாளர்கள், பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர்.

மனுதாக்கல் தொடங்கியதிலிருந்து, வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு தினமும் நாள்படி, 250 ரூபாய், மதியம் பிரியாணி என அசத்தலோ அசத்தல். ஒவ்வொரு வேட்பாளரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, வேட்பாளர்கள் கோடி ரூபாயை இறைத்து, அவர்கள் öŒ#யும் உபசரிப்பால், வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

(dm)


Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்

No comments:

Post a Comment