சாயல்குடியில் கடந்த லோக்சபா தேர்தலில் மற்ற கட்சிகளை விட ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று தி.மு.க., முதன்மை இடத்தை பெற்றது. அடுத்து நடந்த சட்டசபைத் தேர்தலில், வித்தியாசம் 300 ஓட்டாக குறைந்தது. இதன் எதிரொலியாக, நடக்கவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக யாரும் போட்டியிட முன்வரவில்லை.
அ. தி. மு. க., சார்பில் நகர் தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் சேர்த்து 15 வார்டுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தி. மு . க., சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில், தனது ஜாதிக் கூட்டணிக்கு வேலை செய்வதா? இல்லை... அ. தி. மு. க., விற்கு எதிராக வேலை செய்வதா? யாருக்கு ஓட்டளிப்பது என்ற கேள்வி மாஜி ஆளும் கட்சி தொண்டர்கள் மனதில் எழுந்துள்ளது.
இது குறித்து தி. மு. க., நகர் பொறுப்பில் உள்ள முக்கியஸ்தரிடம் கேட்ட போது: சாயல்குடியை பொறுத்தவரை மக்கள் ஜாதிக் கூட்டணிக்குள் இருக்கின்றனர். இதில், "நாங்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தால், இங்கு தி. மு. க., விற்கு செல்வாக்கு தேய்பிறையைப் போல் குறைந்து, அ. தி. மு. க., விற்கு வளர் பிறையைப் போல் செல்வாக்கு கூடிவிட்டது. அ. தி. மு. க., கோட்டையாகி விட்டது, என்று மற்ற கட்சிக்காரர்கள் சொல்வதற்கு இடம் கொடுத்ததாகிவிடும்' எனக் கருதி இத்தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டோம், என்றார்.
No comments:
Post a Comment