Followers

Saturday 15 October 2011

மு.க.அழகிரி கோட்டையில் ஜெயிக்க போவது யாரு ?

 
 
மு.க.அழகிரியின் கோட்டையான மதுரையில் திமுக வேட்பாளராக பாக்கியநாதனும், அதிமுக வேட்பாளராக மாஜி எம்பியான ராஜன் செல்லப்பாவும், விஜயகாந்த் கட்சியான தேமுதிக சார்பாக கவியரசும், காங்கிரஸ் கட்சி சார்பாக சிலுவையும், மதிமுக சார்பாக பாஸ்கர சேதுபதி மற்றும் சுயேட்சை உள்பட 28 வேட்பாளர்கள் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 
மு.க.அழகிரியின் விருப்பப்படி பாக்கியநாதனும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் கே.ராமச்சந்திரனம், கலைஞர் சார்பாக பொன்.முத்துராமலிகமும் சீட்டு கேட்க, சில நாட்கள் இழுபறிக்கு பின்னர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பாக்கியநாதன் களம் இறக்கப்பட்டார். களம் இறக்கிய கையோடு மு.க.அழகிரி, இன்று வரை பாக்கியநாதன் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அழகிரி வராதது பாக்கியநாதன், பாக்கியமில்லாத வேட்பாளராக களத்தில் உள்ளார்.
 
 
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, ஆரம்பம் முதலே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்பதால், தொகுதிக்குள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்து பொந்துகளில் வாக்கு சேகரித்தார். ஆரம்பம் முதலே முன்னணியில் இருப்பதால், பிரச்சாரத்திலும் முன்னணியில் இருக்கிறார் ராஜன் செல்லப்பா. செல்லும் வேட்பாளராக இருக்கிறார் செல்லப்பா.
 
 
 
 
 
 
 
ஜெயலலிதாவிடம் விஜயகாந்த் கேட்ட முதல் மாநகராட்சி மதுரை என்பதாலோ என்னவோ, ஜெயலலிதா அவரை கழட்டி விட்டார். ஜெயலலிதா கழட்டி விட்ட நிலையில், விஜயகாந்த் தான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால், தன்னுடைய கட்சியில் ஆரம்ப கால மன்ற நிர்வாகியான கவியரசை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
 
 
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மதுரைக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். மதுரையில் தேமுதிக வெற்றி பெற்றால் 2016ல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நான் ஆவேன் என்று விஜயகாந்த் சந்து பொந்தெல்லாம் வாக்கு கேட்டு சென்னை திரும்பியபோது, ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை இரண்டாம் இடம் தேமுதிகவுக்கு கிடைத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த். இதனால் இரண்டாம் இடத்துக்கு தவியா தவித்து வருகிறார் கவியரசு.
 
 
காங்கிரஸ் கட்சியில் களம் இறங்கியுள்ளார் சிட்டிங் கவுன்சிலர் சிலுவை. வார்டுக்கே நின்றால் தோற்கும் நிலையில் இருக்கும் சிலுவையை, நூறு வார்டு கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் களம் இறக்கியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கவுரவத்தை சேர்ப்பாரா என்று அக்கட்சியினர் எதிர்பாக்கின்றனர். பல வார்டுகளுக்கு வேட்பாளர் கிடைக்காத நிலையில், மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பாளர் கிடைத்தது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கவுரவத்தோடு களம் இறங்கியுள்ளார் சிலுவை.
 
 
கட்சி இருக்கோ, இல்லையோ தேர்தல் களத்தில் இருக்கிறேன் என்று கோவில் மாநகர் முழுவதும் தனது கம்பீர குரலை பாய்ச்சிய வைகோ, மதுரைக்கு தான் வரும்போதெல்லாம் பாதுகாப்பாக அணிவகுக்கும் தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதிக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்டு பம்பரமாக சுற்றி வந்தார் வைகோ.
 
 
இதில் திமுக அதிமுக நேரடியாக மோதினாலும், தேமுதிக வேட்பாளரைப் பற்றிதான் மதுரை மாநகராட்சி தேர்தலில் பட்டி மன்றமே நடக்கிறது.



துப்பாக்கி-மது பாட்டில் காரில் கடத்திய மார்க்சிஸ்டு கம்யூ. வேட்பாளர் கைது

 
திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி 3-வது வார்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஸ்டாலின். இவர் நேற்று பேரளம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு மதியம் உணவருந்துவதற்காக அங்கு உள்ள கடை வீதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பேரளம் கடை வீதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 
வேட்பாளர் ஸ்டாலின் காரையும் சோதனை போட்டனர். காரில் உரிமம் பெறாத துப்பாக்கி, காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், 3 செல்போன்கள் மற்றும் 2 அடி உயரம் உள்ள 3 இரும்பு கம்பிகள் இருந்தன.இதுகுறித்து போலீசார் ஸ்டாலினிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.
 
உடனே போலீசார் ஸ்டாலின், அவரது நண்பர் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜோதிபாசு, டிரைவர் செந்தில் ஆகியோரை கைது செய்தனர். கார், மது பாட்டில்கள், துப்பாக்கி ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. கைதான 3 பேரும் திருவாரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவருடன் காரில் வந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ராஜீவ் காந்தி, சதீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அறிவாலய நிலப் பத்திரத்தில் எம்.ஜி.ஆர்., பெயர்: கருணாநிதி அறிக்கை


""தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள இடம், முறைப்படி வாங்கப்பட்டது. அந்த பத்திரத்தில், எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது," என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: அண்ணா அறிவாலய நில விவகாரத்தில், ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிவாலய இடம் 25 கிரவுண்ட் தானா, அதற்கு மேல் இருந்தால், அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என, கூறியிருக்கிறார். அந்த பத்திரத்தில் காணி கணக்கில் எழுதப்பட்டுள்ளது. ஒரு காணி என்பது, ஒரு ஏக்கர் 33 சென்ட் என்பதை நான் கணக்கிட்டு, ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று கூறினேன். முழு இடமும், 25 கிரவுண்ட் என நான் கூறவில்லை. சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா?

அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ வாங்கப்பட்டதல்ல; தி.மு.க., அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. தி.மு.க., அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒருவர். நிலத்தை மிரட்டி வாங்கியதை அவர் எதிர்த்ததால், 1972ல் அவரை கட்சியிலிருந்து நீக்கினர் என, ஜெயலலிதா கூறியுள்ளார். அண்ணா அறிவாலய நிலம் வாங்கிய அறக்கட்டளை பத்திரத்தில், எனது பெயர், நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை மிரட்டியோ, வலியுறுத்தியோ வாங்கவில்லை என, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஜெயலலிதாவிடம் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியில் பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக நான் பத்திரத்தையே காட்டி, பதில் கூறியதும், மழுப்பலாக எதை எதையோ பதில் சொல்லி, ஜெயலலிதா தப்பிக்க பார்க்கிறார் என்பதைத் தான், அவருடைய பேச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

(dm)


Filed under: Hot News

பட்டாசு வெடித்து குடிசையில் தீப்பிடித்து விபத்து: பிரசாரத்தை விட்டு ஓடிய சிங்கமுத்து


கும்பகோணம்: அதிமுக பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நடிகர் சிங்கமுத்து பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு இடத்தை காலி செய்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினருக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கும்பகோணத்தில் பிரசாரம் செய்தார். நேற்று காலையில் உடையாளூர் கடை வீதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அழகு த. சின்னையன் வாக்கு சேகரித்தார். அவரை அடுத்து பேச நடிகர் சிங்கமுத்து வந்தார்.

உடனே குஷியான அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் கிளம்பிய தீப்பொறி அங்கிருந்த செல்வராஜ் என்பவரின் குடிசையில் பட்டு தீ பிடித்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்களும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இதைப் பார்த்து சிங்கமுத்து திடுக்கிட்டார். என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்து வந்தாரோ தெரியவில்லை. இந்த விபத்து ஏற்பட்டதால் பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்தார்.

ஓட்டுக்கு பணம் : பா.ஜ., எம்.பி.,க்கு கோர்ட் சம்மன்

 

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி, பா.ஜ., எம்.பி., அசோக் அர்காலுக்கு, டில்லி சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ல் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்காக, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி மற்றும் பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யபட்டுள்ளனர். இந்த வழக்கில், பா.ஜ., எம்.பி.,யான அசோக் அர்கால் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அசோக் அர்காலிடம் விசாரணை நடத்த, லோக்சபா செயலரிடம் அனுமதி வாங்கியுள்ளதாகக் கூறி, அதற்கான ஆதாரத்தை, அரசு தரப்பு வழக்கறிஞர், கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து, வரும் நவ., 3ம் தேதி, அசோக் அர்கால், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி சங்கீதா சிங்க்ரா ஷெகால் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமர் சிங், தற்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவருக்கு உதவி செய்வதற்கு, அவரது மனைவி பங்கஜாவுக்கு அனுமதி அளித்து, சிறப்பு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

(dm)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல்

Friday 14 October 2011

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன்

 
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் போட்டியிடுகிறார்.
 
 
இதே அத்தனூர்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சம்பத் என்பவரின் மகன் செந்தில், உலகநாதன், அ.தி.மு.க பிரமுகரான ராமசாமி, கோவிந்தன் உட்பட ஏழு நபர்களை, பல்வேறு காலகட்டங்களில் கொலை செய்த குற்றத்திற்காக வாழப்பாடி போலிசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் வீரபாண்டியன்.
 
 
உள்ளூரிலேயே, இத்தனை கொலை செய்தவருக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்...? சாட்சிகள் சரியாக அமையாததால், போலீசாரால் வழக்கை நிருபிக்க முடியாமல் போனதால் எல்லா வழக்குகளில் இருந்தும் விடுதலை பெற்றார் இந்த வீரபாண்டியன்.
 
 
 
 
இது தவிர சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களில் மூன்று கொலை வழக்கில் தொடர்புள்ளதாக வழக்கு போட்டு கைது செய்ப்பட்டு அதிலிருருந்தும் வீரபாண்டியன் விடுதலையாகிவிட்டார்.
 
சமீபத்தில் ஒரு ஆசிரியரை பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கும், பல பெண் வழக்கு கடத்தல் வழக்குகளும், இவர் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் உள்ளது.
 
 
இப்படிப்பட்ட ஒருவர் போட்டியிடும் ஒரு தேர்தலில் இவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள்....?
 
வீரபாண்டியனால் பயந்து போயுள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட இந்த கிராமத்தில் யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில், வரதன் என்கிற ஒரு "மாதிரியான" பாட்டி ஒருவர் தானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று போட்டியிடுகிறார்.
 
 
"டேய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று பலரும் வரதனை எச்சரித்துள்ளனர். "என்னை வீரபாண்டியன் கொன்றாலும் பரவாயில்லை"... என்று அசட்டு தைரியத்தில் போட்டியிடுகிறார் வரதன்.
 
 
எப்படியாவது வீரபாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள் வரதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வீரபாண்டியனுக்கு எதிராக வரதனுக்கு ஒட்டு போட நினைத்துள்ளார்கள்.
 
 
"இதை" புரிந்து கொண்ட வீரபாண்டியன், எனக்கு எதிராக யாராவது ஒட்டுப் போட்டால், எந்த வார்டில் எனக்கு ஒட்டு போடவில்லையோ அந்த வார்டில் உள்ள வீடுகளை எல்லாம் தீ வைத்து கொளுத்திவிடுவேன் என்று தனது குடும்பத்தினருடன் சென்று வீடு வீடாக மிரட்டி வந்துள்ளார்.
 
 
இது பற்றி பொதுமக்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க பயப்பட்ட நிலையில் நேற்று அந்த பகுதிக்கு ரோந்து சென்ற வாழப்பாடி போலீசார் பொது மக்களை மிரட்டி வாக்கு சேகரித்த வீரபாண்டியனின் ஆதரவாளர்கள் அருள், முருகன் மற்றும் மனைவி ஆனந்தி அவரது உறவுக்கார பெண்கள் சரோஜா, தனலட்சுமி, முத்துமாரி, தேவி உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
 
 
தன் மீதும் 307, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட வீரபாண்டியன் இப்போது தலை மறைவாகி விட்டார்.
 
 
தெலுங்கு படத்தின் கதையை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பேசவே அத்தனூர் பட்டியில் இருக்கும் பொது மக்கள் பயப்படுகிறார்கள்.




அதிமுக ஆட்சியில் சில பகுதிகளில் 24 மணி நேர மின்வெட்டு: ஈவிகேஎஸ்

 
 
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 5 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் 24 மணி நேரமாகவும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
 
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1967ம் ஆண்டில் இருந்து திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி சுரண்டி வருகின்றன.
 
தமிழக உள்ளாட்சி தேர்தலில், மக்கள் காங்கிரசுக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ஆதரவை காட்ட உள்ளார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என்று நூற்றுக்கணக்கில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமரப் போகிறார்கள்.
 
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் உண்மையான போட்டி, காங்கிரஸூக்கும், அதிமுகவுக்கும் இடையே மட்டுமே உள்ளது. திமுக இந்தத் தேர்தல் போட்டியில் இருப்பதாக எங்கும் தெரியவில்லை.
 
காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் இருந்து நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் கடந்த 40 வருடங்களாக இல்லாத மக்களின் ஆதரவு தற்போது கிடைத்துள்ளது.
 
காங்கிரஸுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு பயந்து தான், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா 3 நாள்கள் திடீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை நம்பி திமுக எப்படி தோல்வி அடைந்ததோ, அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் பணபலத்துடன் களம் இறங்கியுள்ள அதிமுகவும் தோல்வி அடையும்.
 
இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழக மக்கள் 5 மாதங்களில் வேதனைதான் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் 2 மணி நேரங்களாக இருந்த மின்வெட்டு, தற்போது 4 மணி நேரங்களாகவும், சில கிராமப் புறங்களில் ஒரு நாள் முழுவதிலும் அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் நிலப்பறிப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 95 சதவீதம் உண்மையானவை. திமுக ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கவனிக்காமல், சொத்து சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர். ஜெயிலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் என்றார்.
 
முன்னதாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர் என நல்லகண்ணு கூறுகிறார். அவர் ஒரு பக்கத்தை மட்டும் தான் கூறுகிறார். மறு பக்கத்தில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.
 
அதிமுக அரசின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. போகபோக பழைய நிலை உருவாகிறதோ என அச்சம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லை. கல்வியை முடக்கிவிட்டார்கள்.
 
முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்திற்குத் துணை போகிறார். ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு. தீவிரவாதிகளின் பட்டியலில் அவரும் இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனை மறந்து விட்டு யாரோ புகழ் பாடுகின்றனர் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தது தவறானது.
 
அத்வானி ரதயாத்திரையை பல தடவை தொடங்கியுள்ளார். நடக்க முடியாத காரணத்தால் ரத யாத்திரை நடத்துகிறார் என்றார் இளங்கோவன்.



கொக்கரிக்கும் விஜயகாந்த் - பிரேமலதாவுக்கு வாக்காளர்கள் சூடான கேள்வி

 
 
 
தான் நடித்த ரமணா படத்தைப்போல நிஜத்திலும் லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
இவரின் மனைவி பிரேமலதாவோ, ஒரு படி மேலே போய், இல்லை...கொஞ்சம் ஓவராக போய், இல்லை...இல்லை.....ரொம்பவே ஓவராக போய்.... கேப்டன் விஜயகாந்த் லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த பிறகுதான் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார்; ஆர்ப்பாட்டம் செய்தார் என்று கொக்கரித்து வருகிறார்.
 
 
ஆனால் தேமுதிகவினரோ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தேமுதிகவினர் பணம் கொடுப்பதாக புகார் வந்தது.
 
தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறிவருகின்றனர்.
 
 
திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம், திருவூர், செவ்வாப்பேட்டை,வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் 13.10.2011 அன்று, ஒரு ஓட்டுக்கு ரூபாய் 200 கொடுத்திருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
 
 
லஞ்சத்தை ஒழிப்பேன்..லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் விஜயகாந்த். கேப்டனை பார்த்துதான் காந்தியவாதி அன்னாஹசாரேவே போராட்டம் செய்கிறார் என்கிறார் பிரேமலதா. ஆனால் இவர்கள் கட்சியினரோ இப்படி ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களே. இவர்கள் செய்வதை பார்க்கும்போது விஜயகாந்த் மீதும் சந்தேகம் எழுகிறது என்று கூறுகிறார்கள் அப்பகுதியினர்.
 
 
லஞ்சத்தை ஒழிப்பேன்..ஒழிப்பேன் என்று கூவுவதற்கு முன்பு தொண்டர்களை கூப்பிட்டு வைத்து லஞ்சம் ஒழிப்பேன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பயிலரங்கம் நடத்தலாம் விஜயகாந்த்.



ஜெயலலிதா சவால்...எனக்கு சிரிப்பு தான் வருகிறது: கருணாநிதி

 
 
வழக்குகளை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க திராணியில்லாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த வழக்கிலே நான் நீதிமன்றத்தைச் சந்திக்காமல் இருந்தேன்? அவர்தான் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தைச் சந்திக்க திராணியில்லாமல் 130 முறைக்கு மேலாக வாய்தா பெற்று, வேறு வழியிலே இல்லாமல் உச்ச நீதிமன்றமே அவரை நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதியன்று ஆஜராகுமாறு கட்டளையிட்டிருக்கின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலய நில விவகாரம் குறித்து ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். திருச்சியில் இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா முதன் முதலாகப் பேசும்போது, திரு.கே.என். நேருவைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, "அவருடைய தலைவரே அண்ணா அறிவாலயத்திற்கு நிலம் வாங்கியதில் ஊழல் செய்தவர், அவருடைய சீடரும் அப்படித் தானே இருப்பார்" என்று பேசத் தொடங்கி, அவர் சாட்டிய குற்றச்சாற்று அவர்களுடைய கட்சிப் பத்திரிகையிலும், மற்ற ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.
 
அந்தக் குற்றச்சாற்றில், "இந்தப் பத்திரத்தில் ஜமீன்தாரின் குடும்பத்தினர் பலர் கையெழுத்து இடவில்லை. ஜமீன் குடும்பத்தில் உள்ள பத்து பேருக்குப் பதிலாக சுப்புரத்தினம் நாயுடு மட்டும் கையொப்பம் இட்டு இருக்கிறார். ஆனால் இந்த இடத்திற்கான பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயர் இல்லை, இதை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலேயே நில அபகரிப்பில் கைதேர்ந்தவர் கருணாநிதி" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அந்தக் குற்றச்சாற்றிற்கு அதே திருச்சியில் நான் பதில் அளிக்கும்போது, அந்தப் பத்திரத்தையே காட்டி, அதிலே பத்து பேர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள், சுப்புரத்தினம் பெயரும் பத்திரத்தில் உள்ளது, எனவே ஒருவர் தான் கையெழுத்திட்டிருக்கிறார் என்று ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு தவறானது, அதை நிரூபிக்கத் தயாரா என்று கேட்டிருந்தேன்.
 
அப்போது அந்த இடம் எத்தனை கிரவுண்ட் என்பது பற்றியெல்லாம் ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசாத காரணத்தால் அந்த இடத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியெல்லாம் நான் விவரமாகக் கூறவில்லை. தற்போது ஜெயலலிதா- அவர் முதலில் பேசிய, அதாவது விற்பனை பத்திரத்தில் ஒருவர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் என்பதையும், அந்தப் பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயரே இல்லை என்று கூறியதையும் அப்படியே மறைத்துவிட்டு, அந்த இடம் 25 கிரவுண்ட் தானா? அதற்கு மேல் இருந்தால் அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
 
உண்மையில் அந்தப் பத்திரத்தில் இடத்தின் மொத்த அளவு "கிரவுண்ட்" கணக்கில் குறிப்பிடப்படவில்லை. பத்திரத்தில் உள்ளதெல்லாம் The Net extent of land sold under this document 3 Cawnies, 12 grounds and 1951 Sq.feet marked Red in the sketch attached hereto" என்று தான் இருக்கிறதே தவிர, 25 கிரவுண்ட் என்றோ, மொத்தம் எத்தனை கிரவுண்ட் என்றோ அதிலே குறிப்பிடப்படவில்லை என்பது தான் உண்மை.
 
விற்பனை பத்திரத்தில் 3 காணி என்றிருந்ததால், 1 காணி என்பது 1 ஏக்கர் 33 சென்ட் அதாவது சுமார் 25 கிரவுண்ட் என்ற அடிப்படையில் ஒரு காணி என்பதற்கு ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று சொன்னேனே தவிர, முழு இடமுமே 25 கிரவுண்ட் என்ற பொருளில் நான் பேசவில்லை. ஆனால் ஜெயலலிதா மொத்த இடமும் 25 கிரவுண்ட் என்று தான் பேசினாய், அதற்கு மேலே இடம் இருந்தால் அரசுக்கு கொடுத்து விடத் தயாரா என்று கேட்டிருக்கிறார்.
 
சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 51 ஏக்கர் நிலத்தையும், அரசுக்குச் சொந்தமான 28 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துக் கொண்டவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலேயே குற்றம் சாட்டப்பட்டு, நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷன் ஏற்றுக் கொண்டதை மறக்க முடியுமா? அதுபோலவே கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டிக் கொண்டு ஏழையெளிய மக்களுக்கான பாதையைக் கூட விட மறுத்து உச்ச நீதி மன்றம் வரை வழக்கு நடைபெற்று, கடந்த 18-3-2011ல் உச்ச நீதிமன்றம் 24 மணி நேரமும் இலவசமாக பாதையைத் திறந்து விட வேண்டுமென்று தீர்ப்பளித்தும் இன்று வரை அதனைச் செயல்படுத்தாமல் இருப்பவர் ஜெயலலிதா என்பதைத் தான் மறக்க முடியுமா?.
 
ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்று, விற்பனைப் பத்திரத்தில் ஒருவர் தான் கையெழுத்திட்டுள்ளார், மற்றவர்கள் கையெழுத்திடவில்லை. பத்திரத்தில் கையெழுத்திட்ட சுப்புரத்தினம் நாயுடு பெயரே, அந்தப் பத்திரத்தில் இல்லை என்பதாகும். நான் அதை மறுத்து, ஒருவர் மட்டும் கையெழுத்திட்டுள்ளார் என்பது தவறான விவரம்.
 
பத்திரத்தில் ஒருவர் பெயர் மட்டுமே இருக்கிறது என்று சொல்வதும் தவறான விவரம். அதை ஜெயலலிதா நிரூபிக்கத் தயாரா?, ஒரு முதல் அமைச்சர் தவறான தகவலைத் தரலாமா?, இந்த ஒரே ஒரு அறைகூவலுக்கு அம்மையார் பதில் அளிப்பாரா? என்று கேட்டதற்கு ஜெயலலிதா வழக்கம் போல் நேரடியாகப் பதில் அளிக்காமல், பதிலளித்திட முடியாத அந்தப் பிரச்சனையை அப்படியே விட்டு விட்டு, கருணாநிதி பேசும்போது அந்த இடம் 25 கிரவுண்ட் என்று சொல்லியிருக்கிறார், அதற்கு மேல் இடம் இருந்தால் அதை அரசுக்குக் கொடுக்கத் தயாரா என்று பிரச்சனையைத் திரித்து திசை திருப்பக் கூடிய வகையிலே கேட்டிருக்கிறார்.
 
ஜெயலலிதா அம்மையாருக்கு மற்றும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தற்போது குறிப்பிடுகின்ற அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, என் குடும்பத்தினருக்காகவோ வாங்கப்பட்ட நிலம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்காக அந்த இடம் வாங்கப்பட்டுள்ளதே தவிர, யாருடைய சொந்த லாபத்திற்காகவும் வாங்கப்பட்டதல்ல.
 
இன்னும் சொல்லப் போனால், தற்போது நான் வாழ்ந்து வரும் வீட்டைக் கூட, எனது காலத்திற்குப் பிறகு அறக்கட்டளைக்காக அளித்து அதுவும் பதிவு அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவைப் போல, முதலமைச்சராக இருந்த போது அவருடைய பிறந்த நாளுக்காக 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளைப் பெற்று பேராசைப்பட்டு சொந்த வங்கியிலே சேர்த்துக் கொண்டவன் அல்ல நான்.
 
ஜெயலலிதா முதலில் கூறும்போது விற்பனைப் பத்திரத்தில் பல பேர் பங்கு தாரர்களாக இருந்தாலும் சுப்புரத்தினம் நாயுடு மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் என்று கூறினார். அதற்குத் தான் நான் திருச்சியில் பத்து பேர் கையெழுத்து அதிலே இருப்பதாகவும், அதை மறுக்கத் தயாரா என்றும் கேட்டிருந்தேன். தற்போது அதிலே 18 பேர் உரிமையாளர்கள், ஆனால் பத்து பேர் தான் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்கும் நான் பதில் கூறுகிறேன்.
 
கையெழுத்திட்ட பத்து பேர்கள் தவிர, வேறு சில உரிமையாளர்கள் மைனர்கள். அதனால் தான் அவர்கள் கையெழுத்திடவில்லை. ஆனால் அந்த மைனர்களின் தந்தைகளும் அதன் உரிமையாளர் என்ற தகுதியில், காப்புத் தந்தை என்று குறிப்பிட்டு, அவர்கள் தங்கள் மைனர் பிள்ளைகளுக்காக கூடுதலாக அந்தப் பத்திரத்திலே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
 
ஜெயலலிதா தற்போது மேலும் கூறும்போது பத்திரத்தில் பத்து பேர் கையெழுத்து போட்டுள்ளனர், அதில் பெரும்பாலானோர் கையெழுத்து உண்மையானது தானா? என்று சந்தேகம் எழுகிறது என்றும் கூறியிருக்கிறார். முதலில் திருச்சியில் பேசும்போது பத்து பேர் கையெழுத்தே இல்லை என்றார், தற்போது கையெழுத்து உண்மையானது தானா என்கிறார்.
 
டான்சி நில பிரச்சனையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் இருந்த தனது கையெழுத்தை; அது தன்னுடைய கையெழுத்தே இல்லை என்று ஜெயலலிதா மறுத்து, பின்னர் அது அவருடைய கையெழுத்துத் தான் என்று நீதிமன்றத்தாலேயே நிரூபிக்கப்பட்டது அல்லவா, அதனால் தான் அப்படிக் கூறியிருக்கிறார்.
 
மேலும் ஜெயலலிதா பேசும்போது, "திமுக அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒரு உறுப்பினர் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், பத்திரத்தில் கருணாநிதி பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இந்த இடம் மிரட்டி வாங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் எம்.ஜி.ஆரை 1972ம் ஆண்டில் கட்சியை விட்டு நீக்கினர்" என்று கூறியிருக்கிறார். பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரத்தில்,
 
THIS DEED OF TRUST is made on the 14 th day of June 1972, by Dr. M. Karunanidhi, President of the Dravida Munnetra Kazhagam and (2) Dr. V.R. Nedunchezhian, General Secretary of the said Dravida Munnetra Kazhagam, hereinafter called the AUTHORS OF THE TRUST TO AND IN FAVOUR OF (1) Dr. M. Karunanidhi, son of Thiru Muthuvel, aged 48 years, (2) Dr.V.R. Nedunchezhian, son of Thiru Rajagopalan, aged about 50 years, (3) Thiru M.G. Ramachandran son of Thiru Gopala Menon aged about 50 years hereinafter called the TRUSTEES which expression shall mean and include their successors and the temporary trustees appointed as per terms of this Deed" என்று தொடங்கியுள்ளது. எனவே அறக்கட்டளை பத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
 
ஜெயலலிதா தனது பேச்சில், அந்த நிலத்தை விற்ற சுப்புரத்தினம் பயமுறுத்தப்பட்டு, சர்க்காரியா விசாரணை கமிஷன் முன்னால் அழைக்கப்பட்டு, அப்போது அவர் கூறியதற்கெல்லாம் நான் ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்.
 
சுப்புரத்தினம் நாயுடு சாட்சியத்திலே கூறிய இந்தக் குற்றச்சாட்டிற்கெல்லாம் நீதிபதி சர்க்காரியா அவர்களே, தனது தீர்ப்பில் அப்போதே பதில் சொல்லியிருக்கிறார். அந்தப் பதிலையும் நான் அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். அதாவது சர்க்காரியா அவர்கள் தனது தீர்ப்பில், In these circumstances, it cannot be said beyond doubt, that the Sellers were coerced or pressurised to part with this valuable property at a gross under value (அந்த இடத்தை விற்றவர்கள் குறைந்த விலைக்கு விற்கும்படி மிரட்டப்படவும் இல்லை, வலியுறுத்தப்படவும் இல்லை) என்று தெரிவித்த கருத்துக்களையும் நான் கூறியிருந்தேன்.
 
ஜெயலலிதா தனது பேச்சில், ஏழை மக்களின் நலன்களை மேம்படுத்துவது திமுக அறக்கட்டளையின் நோக்கம் என்று குறிப்பிட்டு விட்டு அதிலிருந்து மாறி நடப்பதாகச் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். தி.மு.கழக அறக்கட்டளைச் சார்பில் வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை அண்ணா அறிவாலய வளாகத்திலேயே நடத்தப்பட்டு, 1988 முதல் 2011 செப்டம்பர் வரை இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் 1 லட்சத்து 1 ஆயிரத்து 944 பேராகும்.
 
1995ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 373 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக இந்த அறக்கட்டளை சார்பில் 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
 
ஈழத்தில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மருத்துவ உதவிகளுக்காக 3-11-1995 அன்று 25 லட்சம் ரூபாயும், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தை யொட்டி வெள்ள நிவாரண நிதியாக 23-12-1996 அன்று ஐந்து லட்ச ரூபாயும், 12-12-2005 அன்று 25 லட்ச ரூபாயும், ஏழையெளியோர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகையாக 523 பேருக்கு 25 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், கும்பகோணம் கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் 2004ஆம் ஆண்டு தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 27-7-2004 அன்று 28 லட்சம் ரூபாயும்,
 
சுனாமி கடல் கொந்தளிப்பின் போது பிரதமர் நிவாரண நிதியாக சோனியா காந்தி அம்மையாரிடம் ஒரு கோடி ரூபாயும் தொடர்ந்து தி.மு. கழக அறக்கட்டளையினால் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
 
இது தவிர "பேராசிரியர் அன்பழகனார் ஆய்வு நூலகம்" ஒன்றும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு, ஆய்வு மாணவர்கள் எல்லாம் அதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
 
இறுதியாக அம்மையார் ஜெயலலிதா வழக்குகளை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க திராணியில்லாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த வழக்கிலே நான் நீதிமன்றத்தைச் சந்திக்காமல் இருந்தேன்? அவர்தான் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தைச் சந்திக்க திராணியில்லாமல் 130 முறைக்கு மேலாக வாய்தா பெற்று, வேறு வழியிலே இல்லாமல்
உச்ச நீதிமன்றமே அவரை நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதியன்று ஆஜராகுமாறு கட்டளையிட்டிருக்கின்றது.
 
யாரோ ஒருவர் அவரிடம் கூறியதை தவறாகப் புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியிலே பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக விற்பனை பத்திரத்தையே காட்டி நான் 10ம் தேதி பதில் கூறிய பிறகு, தற்போது மூன்று நாட்கள் கழித்து மழுப்பலாக வேறு எதையெதையோ பதில் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார் என்பதைத் தான் அவருடைய பேச்சு சுட்டிக் காட்டுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.



அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தால் ஒரு அதிகாரி கூட நடமாட முடியாது : ராமதாஸ்

 
 
 
விழுப்புரம் மாவட்ட பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், விழுப்புரம் ரயிலடியில் நேற்று இரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்துவிட்டன. தேர்தல்களை தனியே சந்திப்போம் என்ற பாமகவின் முடிவை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். 2016ல் பாமக ஆட்சியை கொண்டு வர அடையாளமாக இந்த தேர்தலில் பாமக வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
திராவிட கட்சிகள் மக்கள் வறுமையை போக்கவில்லை, தரமான கல்வி இல்லை.
 
தொழில், விவசாய வளர்ச்சி இல்லை. சாராய உற்பத்திதான் நடக்கிறது. கல்வியை தனியாருக்கு விற்றுவிட்டு, தனியாரிடம் இருந்த சாராய விற்பனையை அரசே ஏற்று நடத்தும் கேவலமான நிலை உள்ளது. மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் எங்களுக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும். விவசாயத்தில் வருமானம் இல்லாததால் விவசாயிகள் நிலங்களை விற்கிறார்கள்.
 
50 சதவீத கிராம மக்கள், நகரங்களுக்கு வந்து விட்டனர். பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி கொடுப்போம். தரமான வைத்தியத்தை சாதாரண மக்களுக்கும் கொடுப்போம். 50, 100 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தால் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும். ஒரு அதிகாரி கூட வெளியே நடமாட முடியாது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.