Followers

Wednesday, 12 October 2011

ஜெயலலிதா யார் என்று விஜயகாந்துக்கு தெரிந்திருக்கும் : திருமாவளவன்

 
 
ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, அனைத்து இஸ்லாமிய கிறிஸ்தவர் கூட்டமைப்பு, ஜமா அத்துல் உலமா மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
 
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது,
 
''2001ம் ஆண்டில் இருந்து தலித் அமைப்பு களையும், கிறிஸ்தவ மற் றும் முஸ்லிம் அமைப்பு களை ஒருங்கிணைத்து மாற்று அணி ஏற்படுத்த விரும்பினேன். 2011 சட்ட மன்ற தேர்தல் வரை அது முடியாமல் போனது. ஆனால் தற்போது உள் ளாட்சி தேர்தலில் விருப்பம் நிறைவேறி உள்ளது.
 
திமுக தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி என முதலிலேயே அறிவித்து விட்டார். ஆனால், அதிமுகவில் கூட்டணி கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உடன் வைத்துக்கொண்டே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வரிசை யாக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார்.
 
 
இதனால் வேறு வழியில்லாமல் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேற நேர்ந்தது. இப்போது ஜெயலலிதா யார் என்று விஜயகாந்திற்கு தெரிந்திருக்கும்.
 
திராவிட கட்சிகள் இதுவரை நமது ஓட்டு வங்கியை பயன்படுத்தி வெற்றிகளை பெற்றனர். நாம் வலிமையாக இருந் தால் மட்டுமே இனிவரும் காலங்களில் தனித்து தேர்தலில் நிற்க முடியும்.
 
சேர்ந்திருப்போம் என கூறியதால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
 
கொள்கை அளவில் சிறுபான்மையின மக்களும், தலித்களும் ஒன்றாய் சேர்ந்தால் உத்தர பிரதேசத் தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இங்கும் ஏற்படுத்த முடியும். நாங்கள் நாடாள வாய்ப்பு கேட்கவில்லை. மக்களுக்காக போராட வாய்ப்பு கேட்கிறோம்''என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment