சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியை விஜயகாந்த் விரும்பவில்லை என்று பிரேமலதா கூறினார். மேயர் பதவி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிவஞானம் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவி தேமுதிக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் நேற்று பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இலவசங்களை கொடுத்து மக்களை கவர ஆளுங்கட்சி நினைக்கிறது. இலவசங்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் வருகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும்.
ஆனால், விஜயகாந்த் தனது சொந்த செலவில் ஏராளமான நல உதவிகளை செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்துக்கு விருப்பம் இல்லை என்றாலும் மக்கள் விருப்பத்தின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட்டுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். உள்ளாட்சிகளில் நேர்மையான நிர்வாகத்தை தர தேமுதிக - மார்க்சிஸ்ட் கூட்டணி விரும்புகிறது. இவ்வாறு பிரேமலதா பேசினார்.
No comments:
Post a Comment