Followers

Monday, 10 October 2011

தயாநிதி மாறன் வீட்டு முன் காத்திருந்து உள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்!

 
 
 
முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் இன்று (10.10.2011) சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு வந்த தயாநிதி மாறன் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், 7.15 மணி வரை வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். 15 நிமிடம் காத்திருந்த பின்னர் உள்ளே நுழைந்தனர். 7 சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்த பின்னர், வேறு யாரும் உள்ளே செல்லவில்லை. தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதம் மட்டும் உள்ளே சென்றார். கௌதம் செல்லும் முன்பு ஒரு கார் வீட்டினுள் நுழைந்தது. அந்த கார் தயாநிதி மாறனின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. தயாநிதி மாறனின் தாயார் வீட்டில் இருப்பதாகவும், தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டெல்லியில் இருப்பதாகவம் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment