Followers

Sunday, 9 October 2011

விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசுகள்

 
 
கிருஷ்ணகிரியில் நான்கு முனைசந்திப்பு.முக்கியமான இடம்.தினம் அரசியல் தலைவர்கள் யாராவது பேசிக்கொண்டுதான்இருக்கிறார்கள்.பா.ம.க,தே,மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு தங்கள் வாக்கு வங்கியைதனித்துக் காட்டும் அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.விஜய்காந்த்,ராமதாஸ் போன்றதலைவர்கள் தமிழகமெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
அன்று வழக்கத்துக்குமாறாக பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டிருந்த்து.வானத்தில் வர்ணஜாலம்.விலை உயர்ந்தவையாகஇருக்க வேண்டும்.இடைவிடாத சத்தம்.பெரும்பாலும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில்பட்டாசு சத்தம் கேட்பதில்லை.தலைவர்கள் வந்தவுடன் சில இடங்களில் வெடிப்பார்கள்.
பிரச்சாரவாகனத்தில் நின்றவாறு யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.விசாரித்தபோது விஜய்காந்த்என்று தெரிந்த்து.வெடி சத்தம்தான் கேட்டிருக்குமே தவிர யாருக்கும் அவர் என்னபேசினார் என்பது தெரியாது.கூட்ட்த்தில் இருந்த அவரது கட்சியினருக்கே அவர் பேசியதுகாதில் விழுந்திருக்காது.
 
இன்றுபத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன்.நல்லாட்சி தருவோம் என்று பேசினாராம்.பலர்வெளிப்படையாகவே திட்டிக் கொண்டிருந்தார்கள்.தனது கருத்துக்களை தெரிவிக்கவே ஒருதலைவர் ஊர்,ஊராக அலைந்து பேசுகிறார்.அவரது பேச்சை கேட்கவிடாதவாறு பட்டாசுவெடித்துக் கொண்டாடுவது அவரது வருகையின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது.
நம்மிடையே இன்னொருபழக்கமுண்டு.அவர்கள் செய்த்து போல நாமும் செய்ய வேண்டும் என்று.ஒவ்வொருகட்சியினரும் பட்டாசு வெடித்து புகை கிளப்ப ஆரம்பித்தால் என்னவாகும் என்று கவலையாகஇருக்கிறது.இதனால் ஏற்படும் மாசுபாட்டையும் கவனிக்க வேண்டும்.
 
குழந்தைகள்,பெண்கள் என்று அனைவரும் அதிகம் நடமாடும் பகுதிகள்இவை.குழந்தைகளுக்கு அலர்ஜியை தோற்றுவித்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும்இருக்கிறது.பலனில்லாத இம்மாதிரி விஷயங்கள் தேவைதானா என்பதை,கட்சியினரும்அரசாங்கமும் யோசிக்க வேண்டும்.
விஜய்காந்த் அவர்பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தார்.தான் பேசுவது மக்களைச் சென்று சேர்கிறதா?இல்லையா? என்பதை கவனித்த்தாகவே தெரியவில்லை.ஒருவேளை பக்கத்தில் இருந்துபத்திரிகையாளர்கள் கவனித்து நாளிதழ்களில் போட்டுவிடுவார்கள் என்றுநினைத்திருக்கலாம்.அவர்களும் முழுமையாக கேட்டிருக்க முடியாது.எதிர்க்கட்சித்தலைவரும்,அவரதுகட்சியினரும்,மற்ற கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment