Followers

Monday 10 October 2011

ஜெயலலிதா பயந்து நடுங்கி நேருவை விடுதலை செய்திருக்கிறார் : மு.க.ஸ்டாலின் பேச்சு

 
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (10.10.2011) இரவு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசினார்.
 
 
அவர், ''நான் துவக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். என்ன அந்த மகிழ்ச்சியான செய்து என்று கேட்டால், இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும்,
 
நேரு அவர்களை நாங்கள் சிறையிலே வைத்திருக்க முடியாது என்று ஆட்சியாளர்களே இந்த தேர்தலையொட்டி நாம் பெற இருக்கின்ற மாபெரும் வெற்றியை எதிர்நோக்கி ஜெயலலிதா அவர்களே பயந்து, நடுங்கி இன்று நேரு அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்திருக்கிறார்கள்.
 
 
நேருவை இங்கு விடுதலை செய்தால், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அவர் முகம் காட்டுவார் என்று நினைத்து, அவரை நீதிமன்றத்திலேயே விடாமல், அவரை கடலூர் சிறைக்கு அழைத்துச்சென்றுதான் விடுதலை செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.
 
 
எப்படியாவது திமுக போட்டியிடுவதை தடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா திட்டம் தீட்டினார். திருச்சி மேற்கு தொகுதில் சிறப்பாக செயல்படகூடிய கழகத்தினர் மீதெல்லாம் குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தார்.
 
 
குடமுருட்டி செய்த தவறு என்ன? அவருக்கு அத்தனை கொடுமைகள் நடக்கின்றன. அவர் மீது மீண்டும் மீண்டும் குண்டாஸ் பாய்கிறது.
 
 
ஏற்கனே நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்முடைய நேரு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே இடைத்தேர்தல் வருகிற போது, நிச்சயமாக நேரு அவர்கள்தான் நிற்பார். கலைஞருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ? எங்களுக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது.
 
 
 
 
நேருவைத்தான் கலைஞர் நிறுத்துவார் என்று ஜெயலலிதா, கலைஞரின் உள்ளத்தை தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு நேரு மீது பல்வேறு வழக்குகள் தொடுத்தார். அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெருகிறார்.
 
வழக்கில் ஆதாரமில்லை என்று நீதிபதி, அவரை ஒவ்வொரு முறையும் ஜாமீனில் விடுகிறார்கள். இந்த நிமிடம் வரை எனக்கு சந்தேகமிருக்கிறது.
 
கடலூர் சிறைக்கு அவரை அழைத்து சென்றிருக்கிறார்கள். இரவோடு இரவாக வேறு ஒரு வழக்கை போட்டுக்கூட அவரை மீண்டும் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.
 
 
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கின்றன என்று உரையாற்றிவர்களெல்லாம் சொன்னார்கள். ஐந்தே மாதத்தில் எத்தனையோ கொடுமைகள். ஒன்றே ஒன்று வேதனை கொடுமையை சொல்லுகிறேன். பரமக்குடி துப்பாக்கிசூட்டில் அப்பாவிகள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
 
வேதனையா செய்தி என்னவென்றால், 65வயது முதியவர் தனது மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் எடுத்துசென்றுகொண்டிருந்தவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அடுத்த நாள் அவரது மகனுக்கு திருமணம்.
 
இது தெரிந்து தலைவர் கலைஞர் என்னை அழைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வருமாறு கூறினார். நானும், கழக உறுப்பினர்களோடு சென்றேன். ஐந்தே மாதத்தில் பரமக்குடியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
 
 
இந்த கொடுமைகளூக்கு எல்லாம் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்கள் பாதமலர்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.



No comments:

Post a Comment