விழுப்புரம் மாவட்ட பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், விழுப்புரம் ரயிலடியில் நேற்று இரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்துவிட்டன. தேர்தல்களை தனியே சந்திப்போம் என்ற பாமகவின் முடிவை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். 2016ல் பாமக ஆட்சியை கொண்டு வர அடையாளமாக இந்த தேர்தலில் பாமக வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
திராவிட கட்சிகள் மக்கள் வறுமையை போக்கவில்லை, தரமான கல்வி இல்லை.
தொழில், விவசாய வளர்ச்சி இல்லை. சாராய உற்பத்திதான் நடக்கிறது. கல்வியை தனியாருக்கு விற்றுவிட்டு, தனியாரிடம் இருந்த சாராய விற்பனையை அரசே ஏற்று நடத்தும் கேவலமான நிலை உள்ளது. மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் எங்களுக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும். விவசாயத்தில் வருமானம் இல்லாததால் விவசாயிகள் நிலங்களை விற்கிறார்கள்.
50 சதவீத கிராம மக்கள், நகரங்களுக்கு வந்து விட்டனர். பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி கொடுப்போம். தரமான வைத்தியத்தை சாதாரண மக்களுக்கும் கொடுப்போம். 50, 100 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தால் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும். ஒரு அதிகாரி கூட வெளியே நடமாட முடியாது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment