Followers

Tuesday 11 October 2011

கடந்த ஆட்சியைவிட சட்டம்-ஓழுங்கு மோசம்; விஜயகாந்த் மனைவி ஊட்டியில் அனல் பிரசாரம்


ஊட்டி: கடந்த தி.மு.க., ஆட்சியை விட தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமடைந்துள்ளது என ஊட்டியில் நடந்த பிரசாரத்தின்போது எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா காரசாரமாக பேசினார். தே.மு.திக., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

திருச்சி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெ., தி.மு.க., தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசுகையில்; இந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது அ.தி.மு.க.,வுக்குத்தான் சரிவு தே.மு.தி.க.,வுக்கு இல்லை, கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டது என்றார்.

மின் தட்டுப்பாடு குறையவில்லையே? : தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியிலும், ஊழல் நடந்திருக்கிறது. காங்கிரஸ் அரசிலும் ஊழல் நடந்திருக்கிறது. எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதது தே.மு.தி.க.,தான். கூடங்குளம் பிரச்னையில் முதலில் அக்கறையாக செயல்பட்டது கேப்டன் விஜயகாந்த்தான். இந்த விஷயத்தில் மக்கள் அச்சம் போக்கும் வகையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் மின் தட்டுப்பாடு குறையும் என்றனர். ஆனால் இன்னும் நீடிக்கிறது. அரசு கேபிள் டி.வி., விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மக்களுக்காக தொடர்ந்து போராட தே.மு.தி.க.,வுக்கு மக்கள் வாய்ப்பு தாருங்கள் . இவ்வாறு பிரேமலதா பேசினார்.

No comments:

Post a Comment