Followers

Monday, 27 August 2012

எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்

எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்

ஐந்தாவது நாளாக இன்றும் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் பாரதீய ஜனதா முடக்கியது. அந்த அமளிகளுக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இரு அவ� �களிலும் விளக்கம் அளித்தார். அப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து அறிக்கை சமர்பித்த மத்திய கணக்கு தணிக்கை குழுவினரைப்பற்றி சந்தேகப்படும் கேள்விகளை கேட்டார்.
 
பின்னர் பாராளுமன்றத்தை விட்� ��ு வெளியே வந்த பிரதமர், உருது பழமொழியை உதாரணம் காட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
எனது மவுனம் ஆயிரம் பதில்கள் கூறுவதைவிட சிறந்தது. எனவே உங்களின் கேள்விகளை புறந்தள்ளுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உண்ம� ��யில் உங்களின் கேள்விகளை உள்ளூர மதிக்கிறேன் என்பது தான் இதன் அர்த்தம்.  


எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க: மு.க. ...

எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க: மு.க. ...

நெல்லை,ஆக.27- நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளை ஜவஹர் திடலில் நேற்று  இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் ஏ தோ பெயரளவுக்கு போடப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதனை செயல்படுத்த ஐ.நா. சபைக்கே நேரடியாக தீர்மான நகலை கொடுக்கவுள்ளோம்.

இலங்கை தமிழருக்காக நாங்கள் திடீரென இப்போதுதான் குரல் கொடுப்பது போல சிலர் கூறி வருகின்றனர். 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலேயே இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து இலங்கை தமி ழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.

இலங்கை தமிழர்களுக்காகவே இருமுறை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். தலைவர் கலைஞரும் , பொதுச் செயலாளர் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதுபோல டெசோ அமைப்பும் புதிதாக தொடங்கப்பட்டது அல்ல. 1985-ஆம்  ஆண்டு டெசோ அமைப்பு தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் அப்போதே டெசோ கூட்டங்களை நடத்தியுள்ளோம். ம� ��ுரையில் 1986-ல் டெசோ மாநாட்டை நடத்தியுள்ளோம். அதில் வாஜ்பாய், என்.டி.ராமராவ் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி, உலகெங்கும் உள்ள தமிழர்களை பற்றி கவலைப்படுகிற இயக்கம் தான் தி.மு.க. இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள், இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்� �வுடன், அதனை எள்ளி நகையாட முயன்று வருகின்றனர்.

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் ஆதரவற்றுள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் மீண்டும் டெசோ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடிமறைக்கும் விதமாக தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.

எத்தனை வழக்குகள் போட்டாலும், எந்த � ��ட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க. வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் நீதிமன்றத்துக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் தலைவர் கலைஞர் நீதிமன்றம் வருவார். இலங்கை தமிழர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அரணாக தி.மு.க. இருக்கும் என்றார்.

கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ராதாரவி நக்கல்!

கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ராதாரவி நக்கல்!

கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார் என்று நக்கலடித்துள்ளார் அதிமுக நடிகர் ராத ாரவி.

நாகர்கோவிலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
தேர்தல் சமயத்தில் அதிம� �கவை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி.

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வசதி படைத்தவர்களே வாங்க யோசிக்க கூடிய லேப்-டாப் கம்ப்யூட்டரை பள்ளி, கல்லூரிகளில் படிக� �கும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்கி அவர்களையும் சமநிலைக்கு உயர்த்தி உள்ளார். இது தான் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி.

இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் திமுக தலைவர் கருணாநிதி. அவர் டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார்.

விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்து அவரை எதிர்கட்சி தலைவர் ஆக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவருக்கு அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. அவரெல்லாம் புரட்சிதலைவியைப் பற்றி பேசக் கூடாது.

கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார்.

நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன். ஆனால் ஒரு நல்ல நடிகர் வடிவேலு. அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்க வில்லை. மாறாக விஜயகாந்தை பழி வாங்குவதாக நினைத்து பேசினார். ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்ல� ��மல் போய் விட்டது.

சிலர் புரட்சித்தலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது. இந்தியாவில் இருக் கும் அனைத்து மொழிகளையும் இலக்கணத்தோடு பேசும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவி. அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் அமோக வெற்றி பெறும் என்றார் ராதாரவி.