கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார் என்று நக்கலடித்துள்ளார் அதிமுக நடிகர் ராத ாரவி.
நாகர்கோவிலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
தேர்தல் சமயத்தில் அதிம� �கவை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வசதி படைத்தவர்களே வாங்க யோசிக்க கூடிய லேப்-டாப் கம்ப்யூட்டரை பள்ளி, கல்லூரிகளில் படிக� �கும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்கி அவர்களையும் சமநிலைக்கு உயர்த்தி உள்ளார். இது தான் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி.
இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் திமுக தலைவர் கருணாநிதி. அவர் டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார்.
விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்து அவரை எதிர்கட்சி தலைவர் ஆக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவருக்கு அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. அவரெல்லாம் புரட்சிதலைவியைப் பற்றி பேசக் கூடாது.
கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார்.
நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன். ஆனால் ஒரு நல்ல நடிகர் வடிவேலு. அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்க வில்லை. மாறாக விஜயகாந்தை பழி வாங்குவதாக நினைத்து பேசினார். ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்ல� ��மல் போய் விட்டது.
சிலர் புரட்சித்தலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது. இந்தியாவில் இருக் கும் அனைத்து மொழிகளையும் இலக்கணத்தோடு பேசும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவி. அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் அமோக வெற்றி பெறும் என்றார் ராதாரவி.
No comments:
Post a Comment