
நெல்லை,ஆக.27- நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளை ஜவஹர் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் ஏ தோ பெயரளவுக்கு போடப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதனை செயல்படுத்த ஐ.நா. சபைக்கே நேரடியாக தீர்மான நகலை கொடுக்கவுள்ளோம்.
இலங்கை தமிழருக்காக நாங்கள் திடீரென இப்போதுதான் குரல் கொடுப்பது போல சிலர் கூறி வருகின்றனர். 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலேயே இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து இலங்கை தமி ழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.
இலங்கை தமிழர்களுக்காகவே இருமுறை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். தலைவர் கலைஞரும் , பொதுச் செயலாளர் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதுபோல டெசோ அமைப்பும் புதிதாக தொடங்கப்பட்டது அல்ல. 1985-ஆம் ஆண்டு டெசோ அமைப்பு தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் அப்போதே டெசோ கூட்டங்களை நடத்தியுள்ளோம். ம� ��ுரையில் 1986-ல் டெசோ மாநாட்டை நடத்தியுள்ளோம். அதில் வாஜ்பாய், என்.டி.ராமராவ் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி, உலகெங்கும் உள்ள தமிழர்களை பற்றி கவலைப்படுகிற இயக்கம் தான் தி.மு.க. இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள், இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்� �வுடன், அதனை எள்ளி நகையாட முயன்று வருகின்றனர்.
இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் ஆதரவற்றுள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் மீண்டும் டெசோ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடிமறைக்கும் விதமாக தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
எத்தனை வழக்குகள் போட்டாலும், எந்த � ��ட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க. வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் நீதிமன்றத்துக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் தலைவர் கலைஞர் நீதிமன்றம் வருவார். இலங்கை தமிழர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அரணாக தி.மு.க. இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment