Followers

Saturday, 15 October 2011

பட்டாசு வெடித்து குடிசையில் தீப்பிடித்து விபத்து: பிரசாரத்தை விட்டு ஓடிய சிங்கமுத்து


கும்பகோணம்: அதிமுக பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நடிகர் சிங்கமுத்து பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு இடத்தை காலி செய்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினருக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கும்பகோணத்தில் பிரசாரம் செய்தார். நேற்று காலையில் உடையாளூர் கடை வீதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அழகு த. சின்னையன் வாக்கு சேகரித்தார். அவரை அடுத்து பேச நடிகர் சிங்கமுத்து வந்தார்.

உடனே குஷியான அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் கிளம்பிய தீப்பொறி அங்கிருந்த செல்வராஜ் என்பவரின் குடிசையில் பட்டு தீ பிடித்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்களும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இதைப் பார்த்து சிங்கமுத்து திடுக்கிட்டார். என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்து வந்தாரோ தெரியவில்லை. இந்த விபத்து ஏற்பட்டதால் பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்தார்.

No comments:

Post a Comment