உள்ளாட்சி தேர்தலையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி 07.10.2011 அன்று அரூர் பகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு பர்கூர் வழியாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகருக்கு வந்து வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின்போது பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள், கட்சியினர் ஒருபகுதியினர் தவிர கூட்டம்மேயில்லை. இதுப்பற்றி தேமுதிக நிர்வாகிகளிடம் பேசியபோது, ஒரு வாரத்துக்கு முன்னர் பிரச்சாரத்துக்கு வந்தவர் நேரம் ஆகிவிட்டது என்று எதுவும் பேசாமல் போய்விட்டார்.
அதற்குப்பின்னர் இப்போது தான் வருகிறார். விஜயகாந்த் வருகை பற்றி கட்சி நிர்வாகிகள் அவ்வளவா விளம்பரம் செய்யவில்லை. அதனால் தான் அவர் வர்றது யாருக்கும் தெரியவில்லை என்றார்கள்.
மாவட்ட நிர்வாகம் பற்றி இளைஞரணி மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் இதுப்பற்றி விஜயகாந்த்திடம் புகார் கூறியுள்ளனர். தான் வருவது பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்காத நிர்வாகிகளை அழைத்து, 'என்னய்யா கூட்டமே இல்லை' என்று கடுமையாக திட்டியுள்ளதாக அவரது கட்சியினர் கூறினர்.
07.10.2011 அன்று இரவு திருப்பத்தூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'அந்தம்மாவை முதல்வராக்கியது நாம்தான். நம்மை இப்போ வெளியே தள்ளியுள்ளது. நாம் யார் என்பதை இந்த தேர்தல் மூலம் மற்ற கட்சிகளுக்கு தெரியப்படுத்துவோம். திமுக, அதிமுகவை அரசியல் களத்தை விட்டே துரத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் மக்களே' என்றார்.
No comments:
Post a Comment