சிவகங்கை நகரசபை தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்கண்ணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
அ.தி.மு.க.வுடன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கூட்டணி வைத்தோம். பழிக்கு ஆளானோம். காலம் பழியை துடைத்து விட்டது. சுய மரியாதை, தன்மானம் ஆகியவைதான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி விலகினோம். அதனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுகின்றோம்.
தமிழகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை போக்குவதற்காக நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைக்க தயாராகி விட்டது. அதற்காக அணையின் 2 பகுதியை தேர்வு செய்துள்ளது. புதிய அணை கட்ட 666 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டப்பட்டால் தென் தமிழகமே திரண்டுவிடும்.
மற்ற கட்சிகளை போல அல்லாது ம.தி.மு.க. தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடுகிறது. தூக்கு தண்டனையில் இருந்து 3 தமிழர்களின் உயிர்களை காக்க போராடுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடுகிறது. இலங்கையில் தமிழர் படுகொலையை எதிர்த்து போராடுகிறது.
ராமேசுவரத்தில் மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுகிறது. உலகில் எங்கும் துன்பம் என்றாலும், அதை தவிர்க்க போராடுகிறோம். எந்த பிரச்சினை ஆனாலும் சரி தெளிவான இலக்கை வைத்து செயல்படுகிறோம். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment