Followers

Tuesday, 11 October 2011

வாக்குசேகரிப்பின்போது வேட்பாளருக்கு குழந்தை பிறந்தது

 
 
 
 
 
பவானி நகராட்சி 5வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் பவித்ரா (20). இவரது கணவர் பெயர் சின்னதம்பி. பவித்ரா கர்ப்பிணியாக இருந்தார்.
 
இந்நிலையில் இவர் பா.ம.க. சார்பில் பவானி நகராட்சி 5-வது வார்டுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வார்டு முழுக்க தனது கணவர் சின்னதம்பியுடன் சேர்ந்து நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
 
 
 
மாலையில் இவர் குருநாதசாமிக்கவுண்டர் வீதியில் நடந்து சென்று ஓட்டு கேட்டபோது இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
 
உடனடியாக அவரை ஆட்டோ மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
 
இது இவருக்கு முதல் பிரசவமாகும். சுகப்பிரசவமாய் அமைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ள தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
வேட்பாளர் மக்களை தேடி வருவதற்கு பதில் மக்கள் வேட்பாளரை தேடி சென்று வாழ்த்து கூறினர்.



No comments:

Post a Comment