Followers

Friday 14 October 2011

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன்

 
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் போட்டியிடுகிறார்.
 
 
இதே அத்தனூர்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சம்பத் என்பவரின் மகன் செந்தில், உலகநாதன், அ.தி.மு.க பிரமுகரான ராமசாமி, கோவிந்தன் உட்பட ஏழு நபர்களை, பல்வேறு காலகட்டங்களில் கொலை செய்த குற்றத்திற்காக வாழப்பாடி போலிசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் வீரபாண்டியன்.
 
 
உள்ளூரிலேயே, இத்தனை கொலை செய்தவருக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்...? சாட்சிகள் சரியாக அமையாததால், போலீசாரால் வழக்கை நிருபிக்க முடியாமல் போனதால் எல்லா வழக்குகளில் இருந்தும் விடுதலை பெற்றார் இந்த வீரபாண்டியன்.
 
 
 
 
இது தவிர சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களில் மூன்று கொலை வழக்கில் தொடர்புள்ளதாக வழக்கு போட்டு கைது செய்ப்பட்டு அதிலிருருந்தும் வீரபாண்டியன் விடுதலையாகிவிட்டார்.
 
சமீபத்தில் ஒரு ஆசிரியரை பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கும், பல பெண் வழக்கு கடத்தல் வழக்குகளும், இவர் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் உள்ளது.
 
 
இப்படிப்பட்ட ஒருவர் போட்டியிடும் ஒரு தேர்தலில் இவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள்....?
 
வீரபாண்டியனால் பயந்து போயுள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட இந்த கிராமத்தில் யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில், வரதன் என்கிற ஒரு "மாதிரியான" பாட்டி ஒருவர் தானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று போட்டியிடுகிறார்.
 
 
"டேய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று பலரும் வரதனை எச்சரித்துள்ளனர். "என்னை வீரபாண்டியன் கொன்றாலும் பரவாயில்லை"... என்று அசட்டு தைரியத்தில் போட்டியிடுகிறார் வரதன்.
 
 
எப்படியாவது வீரபாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள் வரதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வீரபாண்டியனுக்கு எதிராக வரதனுக்கு ஒட்டு போட நினைத்துள்ளார்கள்.
 
 
"இதை" புரிந்து கொண்ட வீரபாண்டியன், எனக்கு எதிராக யாராவது ஒட்டுப் போட்டால், எந்த வார்டில் எனக்கு ஒட்டு போடவில்லையோ அந்த வார்டில் உள்ள வீடுகளை எல்லாம் தீ வைத்து கொளுத்திவிடுவேன் என்று தனது குடும்பத்தினருடன் சென்று வீடு வீடாக மிரட்டி வந்துள்ளார்.
 
 
இது பற்றி பொதுமக்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க பயப்பட்ட நிலையில் நேற்று அந்த பகுதிக்கு ரோந்து சென்ற வாழப்பாடி போலீசார் பொது மக்களை மிரட்டி வாக்கு சேகரித்த வீரபாண்டியனின் ஆதரவாளர்கள் அருள், முருகன் மற்றும் மனைவி ஆனந்தி அவரது உறவுக்கார பெண்கள் சரோஜா, தனலட்சுமி, முத்துமாரி, தேவி உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
 
 
தன் மீதும் 307, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட வீரபாண்டியன் இப்போது தலை மறைவாகி விட்டார்.
 
 
தெலுங்கு படத்தின் கதையை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பேசவே அத்தனூர் பட்டியில் இருக்கும் பொது மக்கள் பயப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment