Followers

Wednesday 12 October 2011

அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதே, திரும்பிப்போ... : சரத்குமாரை எதிர்த்து சமகவினர் கோஷம்

 
 
 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நேற்றிரவு பிரச்சாரத்துக்கு வந்த சரத்குமார் கார் மறிக்கப்பட்டது. சமகவினரே அவரை எதிர்த்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
உள்ளாட்சி தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஒரு சில இடங்களில் மட்டும் போட்டியிடுகிறது. மற்ற இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார்.
 
 
 
 
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னத்துரை, மற்றும் யூனியன் வேட்பாளர்களை ஆதரித்து புதியம்புத்தூரில் பிரசாரம் செய்வதற்காக நேற்றிரவு 9 மணியளவில் காரில் புதியம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
 
அங்குள்ள ராஜாவின்கோவில் பஸ்நிறுத்தம் பகுதியில் அவர் வந்தபோது, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சமக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து சரத்குமார் காரை மறித்தனர்.
 
"அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதே, திரும்பிப்போ..திரும்பிப்போ.." என கோஷமிட்டனர். உடனே காரிலிருந்து இறங்கிய சரத்குமார், 'எதற்காக கோஷம் போடுகிறீர்கள்?' என்று கேட்டார்.
 
அப்போது சமகவினர், "ஓட்டப்பிடாரம் யூனியன் 11வது வார்டில் அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், சமக சார்பில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் நீங்கள் அதிமுகவினரை ஆதரித்து பிரசாரம் செய்யக்கூடாது" என்று ஆவேசத்துடன் கூறினர்.
 
 
11வது வார்டில் நமது கட்சியினரும் போட்டியிடுவது குறித்து எனது கவனத்துக்கு கொண்டுவரவில்லை. இதனால் 11வது வார்டில் மட்டும் யாரையும் ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டேன் என்று சரத்குமார் உறுதியளித்ததால் சமகவினர் சமரசம் அடைந்தனர்



No comments:

Post a Comment