Followers

Saturday, 8 October 2011

ராகுல் காந்தியிடம் சிரஞ்சீவி வேண்டுகோள்

 
 
 
ஆந்திர மாநிலத்தில் தொடரும் தெலுங்கானா பிரச்சனையில் உடனடி முடிவு எடுக்குமாறு ராகுல்காந்தியிடம், சிரஞ்சீவி பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
தெலுங்கானா பிரச்சனை ஆந்திர முழுவதும் பூதகரமாக வெடித்து, இன்று 26 நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான சிரஞ்சீவி, காங்கிரஸ் பொது செயலர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
 
அப்போது, ஆந்திராவில் உள்ள விவசாய நிலவரம் மற்றும் தெலுங்கானா போராட்டத்தால் மாநிலத்தில் நிலவிவரும் பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் நிலக்கிரி சுரங்க தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால், மாநிலத்தில் தொடரும் மின்வெட்டு குறித்தும் பேசியதாக சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
தெலுங்கானா விவகாரத்தில் உடனடி தீர்வு காண, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், தனி மாநில கோரிக்கையில் தாமதம் காட்டுவதால், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்தாக, சிரஞ்சீவி தெரிவித்தார்.
 
முன்னதாக, டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க சிரஞ்சீவி திட்டமிட்டதாகவும், அதற்கான நேரம் ஒதுக்கப்படாமல் போனதால் ராகுல் காந்தியை, சிரஞ்சீவி சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment