Followers

Wednesday 5 October 2011

நான் காந்தியின் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாதவன்- அன்னா

 
 
என்னை யாரும் காந்தியுடன் ஒப்பிட வேண்டாம். அவரது காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன் நான். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற மட்டுமே செய்கிறேன். அவருடன் என்னை ஒருபோதும் நான் இணைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
 
அன்னா ஹஸாரே இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
என்னை காந்தியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. நான் காந்தியடிகளின் காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன். அவரது கொள்கைகளை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
 
நான் மிரட்டி காரியம் சாதிப்பதாக கூறுவதில் உண்மை. நான் யாரையும் பிளாகமெயில் செய்யவில்லை. நான் என்ன பணமா கேட்கிறேன். அவர்கள் அரசியல்சாசன சட்டத்தை மறந்து விட்டனர். 1950களில் இந்த நாட்டின் உரிமையாளர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் எல்லோராலும் நாடாளுமன்றத்திற்குள் போக முடியாது என்பதால் அரசியல்வாதிகளை எம்.பிக்களாக தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். நாட்டைப் பாதுகாப்பார்கள், நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்தோம். அப்படிப்பட்ட எம்.பிக்கள், நாட்டுக்கு உதவும் வகையிலான நல்ல சட்டங்களை இயற்றாமல் போனால் எப்படி? மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள் என்று கூறினால் பிளாகமெயில் என்பதா. போராட்டம் நடத்துவது நிச்சயம் பிளாக்மெயில் ஆகாது.
 
நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் யோகாசனம், பிராணயாமா, தியானம் ஆகியவற்றை செய்கிறேன். எட்டரை மணிக்கு என்னைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். மாலை வரை இப்படியே ஓடி விடும். இடையில் கடிதம் எழுத நேரம் எடுத்துக் கொள்கிறேன். இரவு 10 மணிக்குத் தூங்கப் போகிறேன்.
 
நான் ரொட்டியும் காய்கறியும்தான் சாப்பிடுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவேன். காலையில் பால் சாப்பிடுவேன். மாலையில் ஜூஸ் ஏதாவது சாப்பிடுவேன்.
 
எனக்கென்று எந்த இலக்கும், கொள்கையும் இல்லை. சுயநலமற்ற வகையில் கடைசி வரை செயல்படவே விரும்புகிறேன்.
 
நான் பிரதமர் பதவிக்கெல்லாம் சற்றும் பொருந்த மாட்டேன். அரசியலில் புகும் ஆர்வமும் இல்லை. அது எனக்கு ஒத்துவராது.
 
எனது குழுவில் உள்ள சிலருக்குள் ஈகோ பிரச்சினை இருப்பது உண்மைதான். அவர்களை மாற்ற நான் முயற்சித்து வருகிறேன். இது சாதாரணமானதுதான். எங்களிடம் உள்ள இதே குறைகளைப் போல அரசிடமும் உள்ளது. கபில் சிபலும், .சிதம்பரத்தையும் உதாரணமாக கூறலாம். எல்லா இடங்களிலும் இது உள்ளதுதான். எனது குழுவில் உள்ள அனைவருமே நல்லவர்கள் என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள குறைகளை நான் களைந்து வருகிறேன். அவர்கள் மாறுவார்கள் என்றார் அன்னா.

 


No comments:

Post a Comment