சென்னை மாநகராட்சியில் 200 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2470 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த அளவாக 17 வது வார்டில் 2பேரும் அதிக அளவாக 63 வது வார்டு மற்றும் 131 வார்டுகளில் 23 பேர்களும் போட்டியிடுகின்றனர்.
சென்னை மாநகராட்சி தேர்தல் இம்மாதம் 17ந்தேதி நடக்க உள்ளது. விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் 200 வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர் பதவிக்கு 3452 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனையின்போது 300 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 3152 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 682 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். தற்போது 2470 பேர் களத்தில் உள்ளனர்.
1.திருவொற்றியூர் மண்டலத்தில் 1 முதல் 14 வார்டுகள் உள்ளன. இந்த 14 வார்டுகளுக்கு
125பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். 2. மணலி மண்டலத்தில் 15 முதல் 21வது வார்டுவரை உள்ள 7 வார்டுகளில் 47 பேர்களும், 3. மாதவரம் மண்டலத்தில் 22 முதல் 33 வரை உள்ள 12 வார்டுகளில் 98 பேர்களும், 4. தண்டையார் பேட்டை மண்டலத்தில் 34 முதல் 48 வரை உள்ள 15 வார்டுகளில் 206 பேர்களும், 5. ராயபுரம் மண்டலத்தில் 49 முதல் 63 வரை உள்ள 15 வார்டுகளில் 241 பேர்களும், 6. திரு.வி.க நகர் மண்டலத்தில் 64 முதல் 78 வரை உள்ள 15 வார்டுகளில் 208 பேர்களும், 7.அம்பத்தூர் மண்டலத்தில் 79 முதல் 93 வரை உள்ள 15 வார்டுகளில் 202 பேர்களும், 8. அண்ணா நகர் மண்டலத்தில் 94 முதல் 108 வரை உள்ள 15 வார்டுகளில் 219 பேர்களும், 9. தேனாம்பேட்டை மண்டலத்தில் 109 முதல் 126 வரை உள்ள 18 வார்டுகளில் 229 பேர்களும், 10. கோடம்பாக்கம் மண்டலத்தில் 127 முதல் 142 வரை உள்ள 16 வார்டுகளில் 249 பேர்களும், 11. வளசரவாக்கம் மண்டலத்தில் 143 முதல் 155 வரை உள்ள 13 வார்டுகளில் 169 பேர்களும், 12. ஆலந்தூர் மண்டலத்தில்
156 முதல் 169 வரை உள்ள 14 வார்டுகளில் 114 பேர்களும், 13. அடையாறு மண்டலத்தில் 170 முதல் 182 வரை உள்ள 13 வார்டுகளில் 187 பேர்களும், 14. பெருங்குடி மண்டலத்தில் 183 முதல் 191 வரை உள்ள 9 வார்டுகளில் 68 பேர்களும், 15.சோழிங்க நல்லூர் மண்டலத்தில் 192 முதல் 200 வரை உள்ள 9 வார்டுகளில் 108 பேர்களும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
(di)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
No comments:
Post a Comment