Followers

Monday, 14 November 2011

ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு

 
 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.
 
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்?
 
பதில்: அவர் ஒரு முட்டாள்.
 
கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா?
 
பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்று கூற நான் யார்.
 
கேள்வி: அன்னா ஹசாரே தனது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியை நாட தயங்குகிறாரே?
 
பதில்: 1962, 1965ம் ஆண்டுகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பங்கை முன்னாள் பிரதமர்கள் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும் பாராட்டியுள்ளனர் என்றார்.
 
கடந்த 1975 ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரசர நிலைப் பிரகடனப்படுத்தியபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்த சுப்பிரமணிய சாமி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2ஜி ஊழல் குறித்து சாமி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.



No comments:

Post a Comment