பாமக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சுயேட்சை கவுன்சிலர்கள் உள்பட 38 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நேற்று உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 5 பேரும், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், பாமக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேரும் கழகத்தில் இணைந்தனர்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான காவேரி எஸ்.செல்வன் (7வது வார்டு), கிருஷ்ணராஜ் (8வது வார்டு), எஸ்.சத்தியமூர்த்தி (24வது வார்டு), எஸ்.தங்கவேல் (35வது வார்டு), கலையரசி பாலசுப்பிரமணியன் (37வது வார்டு), மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு 8வது வார்டு உறுப்பினர் வி.துளசிமணி, அரச்சலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி கோவிந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.ஆர்.தனபாலன்,
மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் செயலாளர் யு.ஆர்.சீனிவாசன், பாமக ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ரமேஷ், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் டி.ரங்கராஜன், தேமுதிகவின் ஈரோடு மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் ஜெ.ஹக்கீம், மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் எம்.கைலாசம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜோதிமணி கைலாசம், காசிபாளையம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 16 பேர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளர் காகம் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை மாநகராட்சி சுயேச்சை உறுப்பினர்களான அ.மாரி (27வது வார்டு), மு.மோகன் (29வது வார்டு), சி.ஷாலினிதேவி (46வது வார்டு), ஜி.காதர்அம்மாள் (57வது வார்டு), என்.ராமசுப்பிரமணியன் (58வது வார்டு), ஏ.ஹமிதாபேகம் (96வது வார்டு), ப.சந்தியா (98வது வார்டு) ஆகியோரும், பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ் (எ) ராமச்சந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.செந்தில்குமார்,
மாவட்ட தலைவர் பொற்கை பாண்டியன், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழக்கடை இ.சண்முகம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.பாண்டிகாமாட்சி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.வல்லத்தரசு, மதுரை மாநகர் 2ம் பகுதிச் செயலாளர் எஸ்.ஜீவஜோதி, மாநகர் மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆர்.கே.சோமசுந்தரம், மதுரை மாநகர் 8ம் பகுதி மாணவர் அணி தலைவர் ஏ.சரவணகுமார், செயலாளர் ஏ.கண்ணன் மற்றும் மதுரை மாநகராட்சி சுயேச்சை உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 22 பேர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
அப்போது மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரும் உடன் இருந்தனர். தேமுதிகவின் தேனி மாவட்ட செயலாளரும், கூடலூர் நகர மன்றத் தலைவருமான ஆர்.அருண்குமார், புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் எம்.சிவக்குமார், கூடலூர் நகர மன்ற 9வது வார்டு உறுப்பினர் சிராஜுதீன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது, தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
ஜெயலலிதா, சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை அவர்கள் தெரிவித்துக்கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment