பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன்
பொங்கல் திருநாள் அன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத்
துவங்கியுள்ளார்.
பாமகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அதிரடியாக
நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரும்
நீக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய கட்சி துவங்கப்போவதாக அவர்
அறிவித்திருந்தார்.
அறிவித்தவாறே நேற்று அதாவது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று
சென்னையில் புதிய கட்சியைத் துவங்கினார். அவர் தனது கட்சிக்கு தமிழர்
வாழ்வுரிமை கட்சி என்று பெயர் சூட்டியுள்ளார். துவக்க விழாவில் கட்சிக்
கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது ,
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. அதனால் யாருடன்
வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப அரசியல் சட்டத்தை
மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment