இயக்குநர் பாரதிராஜாவைப் போன்றவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட
வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அழைப்பு
விடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் நிறைந்திருந்த கட்சி காங்கிரஸ்.
இருப்பினும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் எல்லாம் திராவிடக்
கட்சிகள் பின்னால்தான் அதிகம் உலவுகின்றனர். சிலர்தனிக் கட்சி தொடங்கிதனி
ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதில் பிரபல
திரையுலகினர் யாரும் இப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம்காட்டுவதில்லை.
For free News videos
எனவே யாராவது பிரபலம் கொஞ்சம் அரசியல் சபலத்துடனோ,சலசலப்புடனோ இருப்பதாக
தெரிந்தால் உடனே கட்சியில் சேர எங்க கிட்ட வாங்க என்று கார் வாடகை
கம்பெனி ரேஞ்சுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்
காங்கிரஸ்காரர்கள்.
முன்பு விஜயகாந்த்தை அழைத்துப் பார்த்தனர். பிறகு விஜய்க்குத் தூது
விட்டுப் பார்த்தனர். அஜீத்தைக் கூட அழைத்துப் பார்த்தனர். இந்த
வரிசையில் தற்போது பாரதிராஜாவையும் கூப்பிட்டுள்ளனர்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசுகையில், பாரதிராஜா போன்றவர்கள்
காங்கிரஸில் வந்து இணைய வேண்டும் என்றுஅழைப்பு விடுத்தார்.விழாவில்
பாரதிராஜா தவிர மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் பங்கேற்றார்.
முன்னதாக பாரதிராஜா பேசுகையில், நான் தீவிர காங்கிரஸ்காரன்.
காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். என்
தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார்.
நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்று சோனியா தலைவராக
இருக்கிறார். இதனால்காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.
அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா, அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து
வேறுபாட்டைப் போன்றது. எனவே நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன்
என்றார் பாரதிராஜா.
Tags: பாரதிராஜா , காங்கிரஸ் , ஞானதேசிகன் , bharathiraja , congress
No comments:
Post a Comment