Followers

Tuesday, 24 January 2012

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில்தகவல்

வரும் 5 மாநில தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற
கருத்துக்கணிப்பு தொடங்கிவிட்டது. இதில் பஞ்சாபில் பாஜகவிடமிருந்து
காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் , உத்தரகண்டில் ஆளும் பாஜக -
காங்கிரஸ் இடையே இழுபறி நிலவினாலும் , பாஜக ஆட்சியில் அமரும் என்றும்
தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப் , கோவா , மணிப்பூர் ஆகிய 5
மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆட்சியை கைப்பற்ற
கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முன்
மக்களின் நாடித்துடிப்பை அறிய காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பாக இந்தத்
தேர்தல் கருதப்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ்...
இந்நிலையில் , உத்தர காண்ட் , பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஸ்டார்
நியூஸ்-நீல்சன் நிறுவனம் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை
நடத்தின. அதில் , பஞ்சாப்பில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு தோல்வியை தழுவும்
என்றும் , காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்என்றும் தெரிய வந்துள்ளது.
பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்தமுறை 44
இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை 63 இடங்களில்
வென்று ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. இங்கு தனி
மெஜாரிட்டிக்கு 59 இடங்கள் தேவை.
பாரதீய ஜனதா கட்சி சிரோண்மணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) கட்சியுடன் கூட்டணி
அமைத்துள்ளது. 2007 தேர்தலில் இந்த கூட்டணிக்கு 68 இடங்கள் கிடைத்தன.
அதில் 49- ல் சிரோண்மணி அகாலி தளமும் 19- ல் பாரதீய ஜனதாவும் வெற்றி
பெற்று இருந்தன.
சிரோண்மணி அகாலி தளம் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக
கூட்டணிக்குவெற்றி வாய்ப்பு குறைந்துள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி 53
தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உறவினர் மன்பிரீத் பாதலின் மக்கள்
கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்று புதிய சட்டசபைக்குள் நுழையும்
வாய்ப்புள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும்
சுயேச்சைகள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிய
வந்துள்ளது.
உத்தரகண்டில் பாஜக..
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனி மெஜாரிட்டிக்கு 36
தொகுதிகள் தேவை. கடந்த முறை 35 தொகுதிகளை கைப்பற்றிய பாரதீய ஜனதா ,
சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது. நடைபெற உள்ள தேர்தலில் பாரதீய
ஜனதா 39 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்என
தெரிய வந்துள்ளது.
அதே சமயம் காங்கிரசின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது.கடந்த முறை 21
இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் , இந்த முறை 29 தொகுதிகளை
கைப்பற்றும்என்று தெரிய வந்துள்ளது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு 2 தொகுதிகள்
கிடைக்கும். ஆயுள் முடிந்த சட்டசபையில் இந்த கட்சிக்கு 13
எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடே - ஓஆர்ஜி
இந்தியா டுடேவும் ஓஆர்ஜி நிறுவனமும் பஞ்சாபில் நடத்திய கணிப்பிலும்
கிட்டத்தட்ட இதே முடிவு வந்துள்ளது. இதில் பஞ்சாபில் காங்கிரஸ் 69
இடங்களைப் பிடிக்கும் என்றும் , பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைக்கும்
என்றும் தெரிய வந்துள்ளது. முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் மீண்டும்
பதவிக்கு வரவேண்டும் என 36 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்போதைய முதல்வர் பாதலுக்கு 29 சதவீதம்பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
' அன்னா ஹஸாரே குழு மீது நம்பிக்கை இல்லை '
இந்த தேர்தல் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி , அன்னா
ஹஸாரேகுழுவின் பிரச்சாரம் மக்களை பாதித்துள்ளதா ? ஹஸாரே சொல்வதை மக்கள்
நம்புகிறார்களா ? என்பதுதான்.
பஞ்சாபில் 46 சதவீதம் பேர் ஹஸாரே சொல்வது பொய் என்றும் , அவர் மீது
தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினர். 20 சதவீதம் பேர் ஹஸாரே
குழுவுக்கு இந்த தேர்தல் பிரச்சாரம் வேண்டாத வேலை என்று கூறியுள்ளனர். 25
சதவீதம் பேர் மட்டும் ஹஸாரேவை நம்புவதாகக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment