Followers

Wednesday, 8 February 2012

ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்?

 
 
 
கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது.
 
காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!
 
கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
 
திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்!
 
இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி!
 
தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர்.
 
இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது.
 
2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்!



No comments:

Post a Comment