Followers

Thursday, 9 February 2012

கேக் வெட்டிய அழகிரி

 



இன்று ஆங்கில தேதிப்படி தன் பிறந்த நாளை கேக் வேட்டி சிம்பிளாக அழகிரி கொண்டாடினார் என்ற செய்தியுடன் அவர் அளித்த பேட்டிக்கு பல சாயம் பூச ஆரம்பித்துவிட்டது மீடியா. திமுக பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், மீடியாக்கள் என்ன எதிர்பார்த்தனவோ அது நடந்துவிட்டது. அழகிரியிடம் என்ன கேள்வி கேட்டால், அதற்கு எவ்வாறு பதில் கிடைக்கும் என்பது மீடியாவிற்கு அத்துப்படி. அதன்படி, தங்கள் பிறந்தநாளன்று, ஸ்டாலினுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஏதும் கூற விரும்பவில்லை, அவரும் மற்றவர்கள் போல ஒரு திமுக தொண்டர்தான் என்ற ரீதியில் அழகிரி பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே கழகத்தில் புகைந்துக்கொண்டு இருக்கும் வாரிசுப் புகைச்சலில், இம்மாதிரியான பதில் குடும்பத்திலும், கட்சி மட்டத்திலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அழகிரிக்குத் தெரியாத்தல்ல. ஆயினும் மீடியாவிற்கு தீனி போடும் வகையில் எதற்காக இப்படி ஒரு பூடகமான பதில்?

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அடைந்த அவமானகரமான படுதோல்வி, அலைக்கற்றை வழக்கில் தொடர்ச்சியாக கழகத்தின் சுயமரியாதையை (??!!) கேள்விக்குரியதாக அடிக்கும் காங்கிரஸ் (சிபிஐ) யின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸின் உதாசீனமான போக்கு போன்றவற்றால் கழகம் நொந்து போயிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வேறு கழகத்தில் கிலியைக் கிளப்பியுள்ளது. இன்றைய நிலை தொடர்ந்தால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமு கழகத்திற்கு என்ன நேரும் என்பதை குடும்பம், மற்றும் கட்சியில் உள்ள சகலரும் அறிவர். எனவே கட்சியை மறுசீரமைக்கும் விதமாக ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இது தொடர்பாக மீடியாக்களில் பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன.

இந்த மறுசீரமைப்பில் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களாகப் பார்த்து நியமித்து வருவதாக மீடியாக்களில் தகவல்கள் வந்தவண்ணமிருப்பதால், அழகிரி தரப்பு சற்றே சுணக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தவிர, வருகின்ற பிஃப்ரவரி மூன்றாம் தேதி நடைபெறவிருக்கின்ற திமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்தாகக் கருதப்படுகிறது. கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகி, அப்பொறுப்பிற்கு அவரது மகன் உதயநிதி வருவாரா? கனிமொழியின் தியாகத்தை மெச்சி, தகுந்த கட்சிப் பதவி கிடைக்குமா? இதையெல்லாம் விட முக்கியமாக கட்சியின் "ப்ரெஸிடெண்ட் ஃபார் லைஃப்" கருணாநிதி விலகி, அப்பொறுப்பிற்கு ஸ்டாலின் வருவாரா? இப்படியெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அழகிரியின் இந்த தடாலடியான பதில், ஸ்டாலினை மட்டுமல்லாது, கருணாநிதியையும் கலகலக்கச் செய்திருக்கும். இனிவரும் நிகழ்வுகள் பலநாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு, கல்யாண போஜனம் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கப் போகின்றன.

டவுட்1: இன்று அழகிரி அளித்த பேட்டியில் கலைஞர் வழியில் தான் நடக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கட்சி பதவி வேண்டாம் என்று சொல்லுகிறார்.
டவுட் 2: தமிழ் வருடம் அது இது என்று பேசி, ஏன் ஆங்கில தேதிப்படி கொண்டாடுகிறார்கள் ?
டவுட் 3: ஸ்டாலினுக்கே கட்சியில் இந்த சாதாரண நிலை என்றால் பேராசிரியர் அன்பழகன் என்ன நினைப்பார் ?
டவுட் 4: படத்தில் அண்ணன் கேக் வெட்ட தயாராக இருக்கிறாரா இல்லை .....?

அண்ணனுக்கு சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் !

No comments:

Post a Comment