Followers

Saturday 11 February 2012

எங்க கட்சிக்கு எத்தனை சீட்டு கிடைச்சாலும் கவலையில்லை! - ராகுல்

 
 
 
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தாலும் கவலை இல்லை. உ.பி. மக்களின் குரல் தலைநகர் லக்னெளவில் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
 
சோரோனில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் பலமுறை ஆட்சி செய்துள்ளன.
 
அனைத்துக் கட்சிகளுமே தங்களது வாக்கு வங்கிகளுக்காக மட்டுமே சேவை செய்கின்றன.
 
அவர்களுக்கு வாக்களிக்காத பொதுமக்களைப் பற்றி இந்த கட்சிகள் சிந்தித்ததே இல்லை.
 
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இப்போது கூறுகிறார்.
 
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டுகளில் 3 முறை சமாஜ்வாதி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அவரது ஆட்சிக்காலத்தில் ஒரு மின்சார திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை.
 
பகுஜன் சமாஜ்வாதி கட்சியோ ஏழைகளைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. பணக்கார ரியல் எஸ்டேட் அதிபர்களைத்தான் அக்கட்சி நண்பர்களாகப் பார்க்கிறது.
 
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். உங்களது குரல் ஏற்கெனவே டெல்லிக்கு கேட்டுவிட்டது. தலைநகர் லக்னோவுக்கு பொதுமக்களின் குமுறல்கள் கேட்டாக வேண்டும் என்றார் அவர்.



No comments:

Post a Comment