Followers

Wednesday, 12 September 2012

தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்



தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம் தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவà ��கிறது. தமிழ்நாடு முழுவதும் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட் மின்சாரமும், காலை, மாலை, இரவு நேரங்களில் 12,000 மெகா வாட் மின்சாரமும் தேவைப்படுகிறது. ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. 30சதவீத மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பற்றாக் குறையை சமாளிக்க சென்னை நகரில் 1 மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்வெ�® �்டு அமல் படுத்தப்படுகிறது. 

தமிழ் நாட்டில் இப்போது மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்தும், ஆரல்வாய் மொழி, பாலகாட், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் வேகம் அ திகரிக்கும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் முழு அளவில் கிடைக்கும் போது தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகம் நிலையற்ற தன்மையில் இருப்பதால் சில சமயம் முழு மின்சாரமும், சில சமயம் மின் உற்பத்தியே இல்லாமலும் போய் விடுகிறது. இதலால் திடீர் என்று மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. 

காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் காற்று சீசன் முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன் தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்தட்டுப்பாடு நிலைமை மோசம் அடையும் நிலை உருவாகிறது. 

தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய மின்நிலையங்களில் இருந்தும், கல்பாக்கம் அணுமின் நிலையம், கர்நாடக மாநில�® �் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில் 1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மேலும் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் காற்றாலை மின்சாரம் தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. அதுவும் இந்த மாத இறுதியில் குறைந்து விடும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை இனிவரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகரில் 1 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தாலும் சில இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு பகுதியாக நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அடுத்து வரும் காலங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.



/

No comments:

Post a Comment