Followers

Sunday 9 September 2012

அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,


அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,




அண்ணா வளைவு விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்துகிறார். அண்ணா பவள விழா வளைவை அகற்ற நான் உத்தரவிடவில்லை, என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கருணாநிதி, அண்ணா வளைவை இடிக்க முதலில் அனுமதியளித்து விட்டு, இடிப்பு பணிகள் பாதியள&#299 7;ு முடிந்த நிலையில், இடிக்கக்கூடாது என, நான் திடீரென உத்தரவிட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போத&#300 9; தான், 117 கோடி ரூபாயில், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்ட அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2011 பொதுத் &# 2980;ேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றேன்.

உத்தரவிடவில்லை:


ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக் கமாக மேற்கொள்ளப்படுவது போல், இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்த மேம்பா&#299 4;ப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து என்னை யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை; நான் அகற்ற உத்தரவிடவும் இல்லை.அரசின் அனைத்து முடிவுகளும், முதல்வர் ஒப்புதல் ப ெற்று வெளியிடப்படுவதில்லை என்பது, ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள&#30 21;ளிவிட்டு, இதுபோன்ற கேள்வியை தனக்கு தானே எழுப்பி பதிலளிக்கிறாரா? என்பதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

அள்ளி வீசும்:


கடந்த ஆட்சியில், மேம்பாலம் அமைக்க, முடிவெடுக்கப்பட்ட போதே, அண்ணா நினைவு வளைவு வழியாகத் தான் பாலம் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பது கருணாநிதிக்கு தெர& #3007;யாதது எப்படி. ஒரு வேளை, சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த வளைவை, அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த மேம்பாலப் பணிக்கு அவர் வழங்கிய உத்தரவு, என்னால் த&#297 5;ைபட்டு விட்டதே, என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போல் உள்ளது.எது எப்படியோ, முந்தைய தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு, என் கவனத்திற்கு முன்பே கொண்டு வரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் உத்தரவிட்டிருப்பேன்.அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து, பத்திரி&#2965 ;ைகளில் வந்த செய்திகளின் மூலம் நான் அறிந்து, பணியை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், இந்த வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்&# 2993; ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கலாம் என்றும் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு நடத்தி, ஈ.வெ.ரா., சாலையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மேம்பாலத்தை, சிறிது கிழக்குப் புறமாக மாற்றியமைத்து, மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தேன். இதன் மூலம் வளைவு அகற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்&#2 965;ிருக்கக் கூடாது என்ற தன் தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவு படுத்த வேண்டு ம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment