Followers

Wednesday 12 September 2012

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., ready for a.d.m.k

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு



லோக்சபா தேர்தலுக்கு, தொண்டர்களை தயார்படுத்தும் வகையில், லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வரும், 19ம் தேதி முதல், நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவினர், தொகுதி வாரியாக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர். லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, மத்திய அரசில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., முடுக்கி விட்டுள்ளது. கடந்த மாதம், 27ம் தேதி நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அ.தி.மு.க., வசம் உள்ள, சட்டசபை தொகுதிகளில், செய்ய வேண்டிய பணிகள் எவை என்ற பட்டியலையும், எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளின் தேவைகள் குறித்த பட்டியலையும் உடனடியாகத் தயார் செய்யும், இதை கண்காணிக்க, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவையும் ஜெயலலிதா அமைத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், தொகுதி வாரியாக தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின், 52 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் பணிகளை ஆற்றிடவும், அமைச்சர்கள் ஓ.பி.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், வரும், 19ம் தேதி முதல், நவ., 9ம் தேதி வரை, லோக்சபா தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். இதில், மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்றம், மகளிர் அணி, இளைஞர் பாசறை உள்ளிட்ட கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். அமைச்சர்கள் அளிக்கும் ஆலோசனைகளின் படி, கட்சிப் பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

வரும், 19ம் தேதி காலை, மதுரையிலும், மாலை, விருதுநகரிலும் கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு இரு லோக்சபா தொகுதிகள் என்ற அடிப்படையில், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அமைச்சர்கள் குழு பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், நவம்பர், 9ம் தேதி வரை நடக்கிறது.

No comments:

Post a Comment