Followers

Wednesday, 23 November 2011

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் ரகளை- திமுக கவுன்சிலர்கள் மீது பாட்டில் வீச்சு

 
 
 
மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தில் பெரும் ரகளை மூண்டது.
 
சென்னை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று கூடியது. காலை 10 மணிக்குக் கூடிய அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
அப்போது திமுக கவுன்சிலர்கள் எழுந்து, மழை காரணமாக சேதமடைந்து விட்ட சாலைகளை மேம்படுத்த வேண்டும், குப்பைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பினர். அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
 
இதையடுத்து இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் மீது சில அதிமுக கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதன் பின்னர் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.



No comments:

Post a Comment