Followers

Monday 21 November 2011

நான் அழைத்தால் கலைஞர் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; கவிஞர் வாலி

 
 
 
நான் அழைத்தால் கருணாநிதி வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்; எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து வருட கால நட்பு இருக்கிறது என்று கவிஞர் வாலி கூறியுள்ளார். வசந்த் டி.வியும், சாதக பறவைகள் சங்கரும் இணைந்து வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் - வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது. ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம்.
 
இது பற்றி கவிஞர் வாலி அளித்துள்ள பேட்டியில், இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நான் அழைத்தால் கருணாநிதி கூட வருவார், வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. என்றார்.
 
ஆட்சி மாறியதும் ரங்கநாயகி என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை உங்களால் இடித்துரைக்க முடியாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கவிஞர் வாலி, இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது, என்று கூறியிருக்கிறார்.



No comments:

Post a Comment