Followers

Friday, 24 February 2012

உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழைக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி

 
 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் நேற்று நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-
 
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடினால் அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டு அவர்களின் மீது துப்பாக்கி குண்டு மழைகள் பொழியப்படுகின்றன.
 
முன்னதாக, கடந்த வருடம் நொய்டா அருகே உள்ள பாட்டா பர்சாவுல் கிராமத்தில் மாயாவதி அரசால் கைப்பற்றப்பட்ட தங்களின் நிலத்துக்கு அதிக நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராடியதை சுட்டிக்காட்டிய ராகுல் தங்களின் தேவையை விவசாயிகள் கேட்டது ஒரு குற்றமா என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், பகுஜன் சமாஜ்வாடி அரசு அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மாயாவதி அரசை குற்றம் சாட்டினார்.
 
காங்கிரஸ் கட்சியல்லாத மற்ற கட்சிகளின் அனைத்து முதல்வர்களும் மாநிலத்தை நாசபடுத்தி பணத்தை சூறையாடியுள்ளனர் என்று கூறிய ராகுல், இந்த நிலையை உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment