சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகரத்தில் நடந்த குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 131 வழக்குகளில் 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 2.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 526 பவுன் தங்க நகை, 3260 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 1 1/2 லட்சம் ரொக்கப் பணம், நான்கு சக்கர வாகனங்கள் 7, 2 மோட்டார்சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன. சென்னையில் 6 கொலை வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆதாய கொலைக்காக நடந்த இந்த வழக்கு துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகை புவனேஸ்வரி மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீதான வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனருக்கு மாற்றப்பட் டுள்ளது. மு.க.ஸ்டானின் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
கைது நடவடிக்கை குறித்து விசாரணை அதிகாரிதான் முடிவு செய்வார். சென்னையில் தனிப்பட்ட முன்விரோத கொலைகள் நிறைய நடக்கின்றன. இதற் கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க இயலாது. ஆதாய கொலை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் படும். வெளி மாநிலத்தவர் சென்னையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இனி வரும் காலங்களில் கணக்கெடுக்கப்படும். சென்னையில் 20 கேரளா கடைகள் தாக்கப்பட்டுள்ளன.
இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை தேடிவருகிறோம். கேரளாக்காரர்கள் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் தண்ணீர் லாரி கிளீனர் ஜெகன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜு, வியாசர்பாடியைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 1 மாதத்துக்குள் வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிபதி ஹசீனா குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். சென்னையில் வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, இணை கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், செந்தாமரைக்கண்ணன், நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment