2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரதிற்கு எதிரான தனது சாட்சியங்களை டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமர்பிக்க தொடங்கினார் .
விசாரணை நீதிமன்றம் டிசம்பர் 8 தேதியில் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் இன்று தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமியை கேட்டது . இதனைதொடர்ந்து சிதம்பரம் 2G மோசடி வழக்கில் இணை-குற்றவாளி எனசேர்க்கப்பட வேண்டும் என்ற அவரது புகார் தொடர்பாக இரண்டு சாட்சியங்கள் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .அதன்படி அவஸ்தி, புலனாய்வு இணை செயலாளர் (சிபிஐ) மற்றும் சிந்துஸ்ரீ குலார், மத்திய நிதி அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஆகியோர்களை விசாரித்தால் சிதம்பரம் உடந்தையாக இருந்தது நிருபணம் ஆகும் அதற்க்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார் .
மறுபுறம் ஹோட்டல் அதிபர் குப்தா என்பவர் மீதான மோசடி வழக்கை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தனது பதவியே தவறாக பயன்படுத்தி வாபஸ் பெற செய்தாக அவர் பதவி விலகக் வேண்டும் என்று பா ஜ க வலியுறுத்தி வருகின்றது .இதனால் சிதம்பரதிர்க்கு நெருக்கடி முற்றியுள்ளது .
No comments:
Post a Comment