Followers

Monday, 5 March 2012

கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் பிட் படம் பார்த்தனர்

 
 
 
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். சட்டசபை நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டு இருந்த தொலைக்காட்சி கேமிராவில் இது பதிவானது.
 
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.
 
இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
 
இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர் கூறியதாவது:-
 
சட்டசபையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment