Followers

Tuesday, 6 March 2012

தடுமாறும் காங்கிரஸ்- கலாமுக்கு மீண்டும் குடியரசு தலைவராக வாய்ப்பு?

 
 
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் குழப்பத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
 
பிரதீபா பாட்டீல்
 
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்த கையுடன் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது
 
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தேர்தலில் போட்டியிருக்குமானால், 19-ந்தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
 
19ம் தேதி பதிவாகும் வாக்குகள் 21ம்தேதி எண்ணப்படும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
 
இந்த இரு தேர்தல்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார்.
 
பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 2012, ஜூலை 25-ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
 
புதிய குடியரசுத் தலைவர்
 
தற்போதைய நிலைமைகளின்படி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்குக் காரணம் எந்தக் கூட்டணி கட்சியும் காங்கிரசை உறுதியாக ஆதரிக்காததுதான். பல்வேறு முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், காஙகிரஸுடன் முறுக்கிக் கொள்கிறது.
 
தி.மு.கவும் அவ்வப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது.
 
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கூட ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டுக் கட்சிகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 
மீண்டும் கலாம்?
 
இந்த நிலையில் எந்த வம்புமே வேண்டாம்... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்கக் கூடிய, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் ஆதரிக்கக் கூடியவரான அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கிவிட்டால் என்ன என்ற விவாதமும் காங்கிரஸ் கட்சியில் எழத் தொடங்கியிருக்கிறது.
 
இதற்காக தான் காங்கிரசாரின் நன்மதிப்பை பெற வேண்டி அண்மையில் இலங்கை சென்று சிங்களவனுக்கு சிங்களத்தில் பேசி துதி பாடினாரா! இப்போது தமிழனை வெறுக்கும் மத்திய அரசுக்கும், தமிழனை அளிக்கும் இலங்கைக்கும் நண்பனாக காவடி தூக்குபவராக மாறியதன் மூலம் ஜனாதிபதி பதவி தேடிவருகிறது என்பது நன்றாக தெரிகிறது.

ஒரு இனைத்தையே வரலாறு இதுவரை பார்த்திடாத வகையில் படுக்கொலை செய்த ஒரு நாட்டுக்கும் அதை செய்ய தூண்டிய இந்திய அரசுக்கும் துதி பாடி பதவி பெறும் அப்துல்கலாம் போன்றவர்கள் மக்களை ஏமாறி மக்கள் வயிற்றில் அடித்து , மக்களை அடிமையாக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இவர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையடுத்து களைகட்டக் காத்திருக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல் என்றால் மிகையில்லை.



No comments:

Post a Comment