Followers

Sunday, 4 March 2012

நான் மறுபடியும் அதிமுகவில் சேரப் போகிறேன்... எஸ்.வி.சேகர் அறிவிப்பு

 
 
 
அதிமுகவில் தான் மீண்டும் சேரவுள்ளதாக காமெடியன் எஸ்.வி.சேகர் அறிவித்து விட்டார். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக கட்சி மாறுகிறார்.
 
ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர் எஸ்.வி.சேகர். பின்னர் அதிமுகவுக்கு வந்தார். அங்கு வந்த பின்னர் அவருக்கு ஏற்றம் கிடைத்தது. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எம்எல்ஏ பதவி அவருக்கு அதிமுக புண்ணியத்தால் கிடைத்தது. மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சும்மா சொல்லக் கூடாது, ஒரு அரசியல்வாதியாக அவர் எப்படி செயல்பட்டாரோ, ஆனால் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக நன்றாகவே செயல்பட்டார்.
 
பின்னர் சசிகலா குடும்பத்தினரிடம் நீக்குப் போக்காக நடந்து கொள்ள மறுத்ததால் கட்சிக்குள் ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் திமுகவுடன் நெருக்கம் காட்டியதால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அவருடன் அனிதா ராதாகிருஷ்ணனையும் சேர்த்து நீக்கினார் ஜெயலலிதா.
 
சமீபத்தில் இயக்குநர் பாக்யராஜும், எஸ்.வி.சேகரும் மீண்டும் அதிமுகவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதை பாக்யராஜ் உடனடியாக மறுத்தார். ஆனால் சேகர் கருத்து தெரிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் செய்தியாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
 
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. நான் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்து கழக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன். எனவே அவரது நல்லாசியுடன் நான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர உள்ளேன்.
 
அரசியல் வாழ்க்கையே அ.தி.மு.க.வில் சேர்ந்த பின் எனக்கு முதல்வரால்தான் கிடைத்தது. பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை சிலரால் ஏற்பட்டது என்றார் அவர்.
 
சசிகலாவை ஜெயலலிதா நீக்கியதை முதலில் வரவேற்றவர் எஸ்.வி.சேகர்தான். சசிப் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.



No comments:

Post a Comment