Followers

Monday, 24 October 2011

'அழகிரியின் வார்டிலேயே 4வது இடத்துக்குத் தள்ளப்பட்ட திமுக'

 
 
 
மதுரையில் இனி மு.க.அழகிரியின் அரசியல் எடுபடாது. அவரது சொந்த வார்டிலேயே திமுகவை 4வது இடத்துக்குத் தள்ளி விட்டனர் மக்கள் என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
 
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நான் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மேயராக ராஜன் செல்லப்பா அமோக வெற்றி பெறுவார் எனக் கூறினேன். தற்போது அது நடந்துள்ளது.
 
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 77 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மிகப் பெரிய வெற்றி முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது.
 
எனவே மதுரையில் இனி மு.க.அழகிரியின் அரசியல் எடுபடாது. அவரது சொந்த வார்டிலேயே திமுக 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் கோட்டை மதுரை என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றார் அவர்.



No comments:

Post a Comment